top of page

'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் திருமணம் !!

  • mediatalks001
  • 1 day ago
  • 1 min read

ree

'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அவரது காதலி அகிலாவை கரம்பிடித்துள்ளார். இவர்கள் இருவரது திருமணம், இன்று அக்டோபர் 31 ஆம் தேதி, இருவரது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ, ஹனு ரெட்டி, போயஸ் கார்டன், சென்னையில் கோலகலமாக நடைபெற்றது.


முன்னதாக நேற்று க்ரீன் பார்க் ஸ்டார் ஹோட்டலில், நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர்கள் சசிகுமார், சிவகார்த்திகேயன், எம் எஸ் பாஸ்கர் , ரமேஷ் திலக், நடிகைகள் சிம்ரன்,அனஸ்வரா விஜயன், தயாரிப்பாளர்கள் 2D Entertainment ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியான், அருண் விஷ்வா, ஷினீஷ், இயக்குநர்கள் 'பூ' சசி, ரஞ்சித் ஜெயக்கொடி, சண்முகப்பிரியன் (லவ் மேரேஜ்), பிரபு ராம் வியாஸ் (லவ்வர்) , மதன் (அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் படம்) இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன்ராஜ், விநியோகஸ்தர் விர்தூஷ், எடிட்டர் பரத் ராம், திங் மியூசிக் சந்தோஷ், ஜியோ ஹாட்ஸ்டார் சபரி ஆகியோர் கலந்துகொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page