top of page

ராபின்ஹுட் பட டிரெய்லரை பாராட்டிய இயக்குநர் ஹெச் வினோத் !!

  • mediatalks001
  • 1 day ago
  • 2 min read

ree

மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் வெளியான ராபின்ஹுட் பட டிரெய்லரை, பாராட்டிய இயக்குநர் ஹெச் வினோத் !!


1980 களில் பின்னணியில் உருவாகியுள்ள காமெடி திரைப்படம் “ராபின்ஹுட்” பட டிரெய்லர் வெளியானது !!


LUMIERES STUDIOS நிறுவனம் சார்பில், ஜூட் மீனே, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில், முதல் முறையாக நடிகர் மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்க, 1980 களின் கிராமப்புற பின்னணியில், கலக்கலான காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ராபின்ஹீட்”.


தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் H வினோத் இப்பட டிரெய்லரை வெளியிட்டு, படக்குழுவை பாராட்டியுள்ளார்.


படத்தின் டிரெய்லரைப் பார்த்த இயக்குநர் H.வினோத் , படத்தின் பின்னணி, விஷுவல்கள் பிரம்மாதமாக உள்ளது. காமெடி அருமையாக உள்ளது. இசை படத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ளது. டிரெய்லர் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.


1980 களில், கிராமத்தில் ஒரு லாட்டரி சீட்டில் பெரிய பரிசு விழ, அந்த பரிசுக்காக இருவருக்கு இடையே நிகழும் போட்டியும், பிரச்சனைகளும் தான் இப்படத்தின் மையம்.


நாம் மறந்து போன லாட்டரி சீட்டு காலத்தை, கிராமப்புற பின்னணியில் மீட்டெடுத்து , கலகலப்பான திரைக்கதையுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனியப்பன்.


இன்று வெளியாகியிருக்கும் டிரெய்லர், 1980 களின் காலகட்டத்தை திரையில் பார்க்கும் குதூகலத்தை தருவதோடு, வயிறு வலிக்க சிரிக்க வைக்கும், ஒரு கலக்கலான எண்டர்டெயினராக இப்படம் இருக்கும் என்பதை, உறுதி செய்கிறது.


இப்படத்தில் நடிகர் மொட்டை ராஜேந்திரன் முதன்முறையாக நாயகனாக களமிறங்கியுள்ளார். எதிர் பாத்திரத்தில் மறைந்த RNR மனோகர் நடித்துள்ளார். இவர்களுடன் KPY சதீஷ், அம்மு அபிராமி, சங்கிலி முருகன், முல்லை மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு அருப்புகோட்டை, காரியாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.


விரைவில் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.


தொழில் நுட்பக் குழு

தயாரிப்பு : LUMIERES STUDIOS

இயக்கம் : கார்த்திக் பழனியப்பன்

தயாரிப்பு : ஜூட் மீனே, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா

இணை தயாரிப்பாளர் : நவாஸ்

இசை : ஸ்ரீநாத் விஜய்

ஒளிப்பதிவு : இக்பால் அஸ்மி

எடிட்டிங் : ஜோமின்

கலை இயக்கம் : கே.எஸ். வேணுகோபால்

டயலாக் : ஜோதிஅருணாசலம்

தயாரிப்பு மேற்பார்வை : A.C. சார்ல்ஸ்

தயாரிப்பு நிர்வாகி : ஆனந்த் ராஜ்

பாடல் வரிகள் : கபிலன்

நடன அமைப்பு : நந்தா

ஸ்டண்ட் : டேஞ்சர் மணி

சவுண்ட் மிக்சிங் : A.M. ரஹமத்துல்லா

எஸ்.எஃப்.எக்ஸ் : அருண் சீனு

இரண்டாம் யூனிட் இயக்குநர் : சக்கி அசோக்

இணை இயக்குநர்கள் : ராம் கோவிந்த், சிவபாலன்

புரமோஷன் டிசைன்ஸ் : செல்லா (ஹாப்பி டேல்ஸ்)

டிரெய்லர் கட் : சரவணன் எடயக்ஞானம்

மக்கள் தொடர்பு - சதீஷ் AIM



Comments


©2020 by MediaTalks. 

bottom of page