top of page

ஜப்பானில் வெளியான 14 நாட்களில் சாதனை படைத்துள்ள நடிகர் அல்லு அர்ஜுனின் ’புஷ்பா2’

  • mediatalks001
  • 8 hours ago
  • 1 min read

நடிகர் அல்லு அர்ஜுனின் ’புஷ்பா2’ திரைப்படம் ஜப்பானில் ரூ. 6.1 கோடி (¥105 மில்லியன்) வசூலுடன் 17000 பார்வையாளர்களையும் கவர்ந்து சாதனை படைத்துள்ளது!


’புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் ஜப்பானில் வெளியான வெறும் 14 நாட்களிலேயே ரூ. 6.1 கோடி (¥105 மில்லியன்) வசூல் செய்துள்ளது. இந்திய நடிகர்களில் உலக அளவில் செல்வாக்கு பெற்றவர் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் என்பதை இந்த சாதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.


உலகெங்கிலும் உள்ள தனித்துவமான நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வெளியிட்டு வரும் ஜப்பான், தற்போது நடிகர் அல்லு அர்ஜூனையும் அவரது ‘புஷ்பா2’ திரைப்படத்தையும் கொண்டாடி வருகிறது. ஜப்பான் திரைப்படங்களின் வழக்கத்திற்கு மாறாக ’புஷ்பா2’ திரைப்படம் 3 மணி 40 நிமிடங்கள் என்ற ரன்டைம் இருந்தபோதிலும், படம் அங்கு வெளியான 14 நாட்களிலேயே கிடைத்திருக்கும் வரவேற்பும் வசூலும் உலகளவில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு அதிகரித்திருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தையும் ‘புஷ்பா2’ திரைப்படத்தின் புகழையும் காட்டுகிறது.


கடந்த சில ஆண்டுகளில், நடிகர் அல்லு அர்ஜுன் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த நடிகராக உருவெடுத்துள்ளார். அவரது திரைப்படங்கள் தொடர்ந்து சர்வதேச கவனத்தை ஈர்த்து, சமூக வலைதளங்களில் பேசுபொருளாகிறது. இதுமட்டுமல்லாது, வெளிநாடுகளில் இந்திய நடிகர்களுக்கான புதிய சாதனைகளையும் உருவாக்கி வருகிறது.


இந்தியாவிலிருந்து ஜப்பான் வரை மாஸ் வணிகத் திரைப்படங்கள் மூலம் கொண்டாடப்படும் சில இந்திய நடிகர்களில் ஒருவராக ‘புஷ்பா2’ திரைப்படம் வாயிலாக நடிகர் அல்லு அர்ஜுன் மாறியுள்ளார். மொழி மற்றும் கலாச்சார எல்லைகளை தாண்டியும் அவரால் ரசிகர்களுடன் இணைய முடிகிறது என்பதை இந்தத் திரைப்படம் நிரூபித்துள்ளது.


உலகளாவிய சினிமாவில் இந்திய நட்சத்திரங்கள் வருகை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அதில் முன்னிலையில் அல்லு அர்ஜூன் இருக்கிறார் என்பதைத்தான் ஜப்பானில் ‘புஷ்பா2’ படத்தின் வசூல் நிலவரமும் கொண்டாட்டமும் காண்பிக்கிறது என்று வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


ஜப்பானில் ‘புஷ்பா2’ திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த திரைப்படங்களுக்காக நடிகர் அல்லு அர்ஜூன் இந்தியாவின் பல முன்னணி இயக்குநர்களுடன் கைக்கோத்திருப்பது சர்வதேச அளவில் அவரை இன்னும் உயர்த்துவதுடன், ஒரு இந்திய நடிகருக்கான இதுவரை இல்லாத அளவிலான உலக அங்கீகாரத்திற்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Comments


©2020 by MediaTalks. 

bottom of page