top of page

‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது

  • mediatalks001
  • Feb 26
  • 1 min read

முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது!!


மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் (Maali Manvi Movie Makers), டி-ஸ்டுடியோஸ் (D Studios), சன்னி டென்வி (Sunny Denvi) டென்வி புரொடக்ஷன் (Denvi Productions) ஆகியோர் தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.


சமீபத்தில் வெளியான டீசரும், முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர், புதுமையான களத்தில் உருவாகியுள்ள வித்தியாசமான ரொமான்ஸ் படமாக இப்படம் இருக்குமென்பதை உறுதிப்படுத்துகிறது.


டிரெய்லரில், விபத்தில் நினைவுகளை இழந்த நாயகி ஒவ்வொரு நாளையும் புதிதாக ஆரம்பிக்கிறாள். ஆனால் அவளுக்கு இரண்டு காதல்கள் இருப்பதாகக் கூறி, இரண்டு நாயகர்கள் அவளைச் சுற்றி வருகிறார்கள். கலகலப்பான நகைச்சுவையும், மனம் முழுவதையும் நெகிழ வைக்கும் அழகிய காதலோடும், இப்படம் ஒரு அசத்தலான கமர்ஷியல் எண்டர்டெயினராக இருக்கும் என்பதை டிரெய்லர் அழுத்தமாக உணர்த்துகிறது. இந்த டிரெய்லர் வெளியான வேகத்திலேயே ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.


இத்திரைப்படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் ஜோடியாக நடித்துள்ள நிலையில், மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக, பல புதுமுக திறமைகளை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி வரும் இயக்குநர் விஜய், இத்திரைப்படத்தின் மூலம் மதும்கேஷ் – ஜியா சங்கர் ஜோடியை அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.


இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், காதலும் உணர்ச்சியும்,கலந்த இசை,ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா காட்சிகளுக்கு அழகிய காட்சித் தன்மையை வழங்கியிருக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை சரவணன் வசந்த் கவனித்துள்ளார். சண்டை இயக்கத்தை மனோகர் வர்மா, உடை வடிவமைப்பை ருச்சி முனோத் மேற்கொண்டுள்ளனர். பாடல் வரிகளை வைரமுத்து, கார்கி, ஆர்கஸ் ஆர்யன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தின் இசை உரிமையை T-Series நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


வரும் மார்ச் 6 அன்று ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தமிழகமெங்கும் (ரோமியோ பிக்சர்ஸ்) Romeo Pictures நிறுவனம் வெளியிடுகிறது


Comments


©2020 by MediaTalks. 

bottom of page