MediaTalks Logo
Header Advertisement
cinema news
28 February 2026 at 15:24•4 Views

ராக்கிங் ஸ்டார் ' யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'தபாஹி

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
ராக்கிங் ஸ்டார் ' யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'தபாஹி

'தபாஹி' - ஃபர்ஸ்ட் சிங்கிள் போஸ்டர்: யாஷ் - கியாரா இணைந்து மார்ச் 2 ஆம் தேதி டாக்ஸிக் உலகின் ஆர்வத்தையும், விருப்பத்தையும் கொண்டு வருகிறார்கள். டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' ( Toxic A Fairy Tale for Grown Ups) படத்தின் முதல் பாடல் மார்ச் 2 ஆம் தேதி வெளியிடப்படுகிறது

'தபாஹி' ஃபர்ஸ்ட் சிங்கிள் போஸ்டர்:

டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' ( Toxic A Fairy Tale for Grown Ups) படத்தில் தீவிரமான மற்றும் உணர்ச்சிமிக்க இசை அத்தியாயமாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. 'ராக்கிங் ஸ்டார்' யாஷ் மற்றும் கியாரா அத்வானி காற்று வீசும் கடலோரத்தில் அன்போடு இருக்கும் காட்சி.. ஒரு மெட்டு கேட்கப்படுவதற்கு முன்பே நெருப்பு, ஆசை மற்றும் உணர்வைப் பற்றிப் பேசுகிறது.

யாஷ்- கியாரா இருவரும் கட்டியணைத்துக் கொண்டு கடற்கரையில் நடக்கும் காதல் மிக்க தருணத்தை உருவாக்குகிறார்கள். இயற்கையான அலைபாயும் கூந்தலுடன் மென்மையான வெண்ணிற உடை அணிந்து கியாரா தோன்றுவது.. மேலும் வசீகரத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் காட்சி நெருக்கமானதாகவும், பிரத்யேகமானதாகவும் இருப்பதையும் இந்த ஜோடி உணர வைக்கிறார்கள். பின்னணியில் உள்ள பரந்த கடல் ...அவர்களின் உணர்ச்சியின் அளவை பிரதிபலிக்கிறது. அது அமைதியற்றது... அடக்கப்படாதது... புறக்கணிக்க முடியாதது.

இந்தப் பாடல் மார்ச் 2 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் தபாஹி-யை சுற்றியுள்ள உற்சாகம் ஏற்கனவே அதிகரித்து வருகிறது. உணர்வு ரீதியாக எதிரொலிக்கும் தரவரிசைப் பாடல்களை வழங்குவதில் பெயர் பெற்ற விஷால் மிஸ்ரா இசையமைத்து பாடிய இந்தப் பாடல் 'டாக்ஸிக்' உலகில் ஒரு சக்தி வாய்ந்த பங்களிப்பை குறிக்கிறது. மிஸ்ராவின் மெல்லிசை வெளிப்படையான குரல் இனிமையுடன் மார்ச் 2 ஆம் தேதி வெளியாகும் முன்பே அதற்கான எதிர்பார்ப்பு சீராக அதிகரித்து வருகிறது.

இந்தப் படத்தில் யாஷ், நயன்தாரா, ஹூமா குரேஷி , ருக்மணி வசந்த் , தாரா சுதாரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யாஷ் எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கியுள்ள 'டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' ( Toxic: A Fairy Tale for Grown Ups) கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் பதிப்புகளுடன் அதன் உலகளாவிய வெளியீட்டை உறுதிப்படுத்துகிறது. கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் தயாரித்த இந்த திரைப்படம் மார்ச் 19 ஆம் தேதி அன்று வெளியாகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: