top of page

கோலாகலமாக நடைபெற்ற செ. ஹரி உத்ரா இயக்கும் ‘மாஸ்டர் பிளான்’ பட பூஜை

  • mediatalks001
  • Mar 3
  • 1 min read

உத்ரா புரொடக்ஷன்ஸ் & டிஜே இன்டர்நேஷனல் தயாரிப்பில், செ. ஹரி உத்ரா இயக்கும் ‘மாஸ்டர் பிளான்’ பட பூஜை கோலகலமாக நடைபெற்றது!!


உத்ரா புரொடக்ஷன்ஸ் & டிஜே இன்டர்நேஷனல் தயாரிப்பில், செ. ஹரி உத்ரா எழுதி இயக்கும் புதிய திரைப்படமான ‘மாஸ்டர் பிளான்’ படத்தின் பூஜை இன்று எளிமையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இப்படம் கோலமாவு கோகிலா, டாக்டர், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற திரைப்படங்களைப் போல அனைவரும் ரசிக்கும் வகையில் கலகலப்பான பிளாக் ஹூயுமர் கலந்த நகைச்சுவை திரைப்படமாக அரசியல் பின்னணியில் இப்படம் உருவாகவுள்ளது.


இன்று நடைபெற்ற பூஜை விழாவில் தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், P.L. தேனப்பன், உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். புதிய முயற்சியாக உருவாகும் இந்த திரைப்படம், அரசியலைச் சேர்ந்த ஆட்களால் ஏற்படும் பிரச்சனையில் நாயகன் நாயகியின் குடும்பம் சிக்கிக் கொள்வதும், அந்த குடும்பம் வில்லன்களிடம் இருந்து, எவ்வாறு மீண்டு வருகின்றது என்பதையும் நகைச்சுவை மற்றும் டார்க் ஹூமர் கலந்த அணுகுமுறையில் சொல்லவுள்ளது.


இந்தப் படத்தில் தருண் விஜய் மற்றும் சாயாதேவி நாயகன்–நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் திவ்யா ஜெகத், அப்புகுட்டி, கூல் சுரேஷ், சென்ட்ராயன், வினோத் சாகர், அருண் மைக்கேல் டேனியல், சம்பத் ராம், சாய் தீனா, பருத்தி வீரன் சரவணன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். முழுக்க முழுக்க நகைச்சுவை ஹூமர் பின்னணியில் நகரும் இப்படம், குடும்ப உறவுகளையும் சமூகச் சிக்கல்களையும் சுவாரஸ்யமாக வெளிப்படுத்தவுள்ளது.


இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் துவங்கி, விழுப்புரம், செஞ்சி, தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது. இயற்கை சூழலும் கிராமப்புற பின்னணியும் இணையும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


கலகலப்பான பிளாக் ஹூயுமர் காமெடியாக உருவாகும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


தொழில்நுட்பக் குழு விபரம்

எழுத்து, இயக்கம், தயாரிப்பு – செ.ஹரி உத்ரா

ஒளிப்பதிவு – அபி அத்விக்

இசை – A J அலி மிர்சாக்

படத்தொகுப்பு – பிரசாந்த்

நிர்வாக தயாரிப்பாளர்கள் – மனோவ் செல்வராஜ், தனகோபால், M.விஸ்வநாதன், சேட்டு K

இணை தயாரிப்பாளர்கள் – பாலகங்காதரன், திவ்யா ஜகத்

மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)

Comments


©2020 by MediaTalks. 

bottom of page