top of page

நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் பேச்சுக்கு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள நடிகர் விஷால்

  • mediatalks001
  • 2 days ago
  • 1 min read

அமரர் எம்ஜிஆர் குறித்து தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் கூறிய கருத்துக்கு நடிகர் விஷால் கண்டனம்


சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரான ராஜேந்திர பிரசாத்,

பழைய நடிகர் காந்தாராவை புகழ்ந்து பேசும் விதமாக பேசியபோது ஒப்பீட்டளவில் எம்ஜிஆர் குறித்து பேசிய வார்த்தைகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.


இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் பேச்சுக்கு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நமது தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் பேசிய கருத்துக்கள் அதிர்ச்சி தருவதாகவும் அருவருக்கத்தக்கதாகவும் இருக்கின்றன. உங்கள் மீது அதிக மதிப்பு வைத்திருக்கும் அதே சமயம், ஒரு ஜாம்பவான் நடிகராக மட்டுமல்லாமல் நாட்டின் தலைசிறந்த தலைவரான மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை குறித்து தாங்கள் பேசிய பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவே இந்த பதிவை வெளியிடுகிறேன்.


நீங்கள் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற நடிகரான திரு காந்தாராவ் அவர்களை பற்றி புகழ்ந்து பேசுவது பெருந்தன்மையுடன் ஏற்கத்தக்கது என்றாலும், அதேசமயம் மக்கள் மனதில் என்றென்றும் நீங்காமல் இடம் பிடித்துள்ள மறைந்த ஜாம்பவான் நடிகர் எம்ஜிஆர் ஐயா பற்றி மதிப்பு குறைவாக பேசிய வார்த்தைகள் எங்கள் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.


இந்த சமயத்தில் எது முக்கியமானது, அவசியமானது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இந்த பிரச்சனை சார்பாக நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என உங்களிடம் கேட்பதற்கு கூட நான் என் மன்னிப்பை தெரிவித்துக் கொள்கிறேன், ஆனால் ஒரு நடிகனாக இருப்பதால் எதிர்காலத்தில் உங்களைப் போன்ற ஒரு அந்தஸ்தில் உள்ள நடிகரை இதே போன்று யாரேனும் பேசினாலும், இதை போல தான் நான் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இருக்கும்.. என நல்லெண்ணத்துடன் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page