top of page

நடிகர், ரேசர் அஜித் குமார் மகிந்திரா பிஇ 6 ஃபார்முலா இ எடிஷன் காரை தனக்கு சொந்தமாக்கியுள்ளார்!

  • mediatalks001
  • 10 hours ago
  • 1 min read



நடிகர், ரேசர் அஜித் குமார் மகிந்திரா பிஇ 6 ஃபார்முலா இ எடிஷன் காரை தனக்கு சொந்தமாக்கியுள்ளார்!


சர்வதேச ரேசரும் நடிகருமான அஜித் குமார் தற்போது மகிந்திராவின் ஃபார்முலா ஈ ரேஸ் கார் ஒன்றை தனக்கு சொந்தமாக்கியுள்ளார். இந்த பிராண்டின் ஃபார்முலா ஈ போட்டியாளரால் ஈர்க்கப்பட்ட சிறப்பு பதிப்பான எலக்ட்ரிக் ஆரிஜின் ஈஎஸ்யுவி காரை நடிகர் அஜித் குமார் தனக்கு சொந்தமாக்கியுள்ளார்.


கடந்த ஆண்டு அக்டோபரில் ஸ்பெயினில் உள்ள ஆண்டலூசியா சர்க்யூட்டில் நடைபெற்ற முக்கியமான சோதனை ஓட்டத்தில், அஜித் குமார் ஜென் 2 ஸ்பெக் கொண்ட முழுமையான மின்சார சிங்கிள் சீட்டர் ரேஸ் காரை ஓட்டினார். அப்போது சீசன் 7 உலக சாம்பியன் நைக் டி வரீஸ் உடன் இணைந்து அவர் பெற்ற அனுபவம், அவரது தொழில்முறை ரேசிங் பயணத்துக்கும் பிஈ 6 ஃபார்முலா ஈ எடிஷன் காரை தேர்வு செய்ததற்குமான தொழில்நுட்ப இணைப்பை காட்டுகிறது. இந்த தேர்வு மூலம் இந்தியாவின் இரண்டு ரேசிங் அடையாளங்கள் ஒன்றிணைந்துள்ளன என்றும், மகிந்திராவின் மின்சார மோட்டார்ஸ்போர்ட் பிரிவுடன் அஜித்தின் நல்லுறவையும் இது வலுப்படுத்துகிறது.



தமிழ் திரையுலகில் அஜித் குமார் முன்னணி நடிகராக இருந்தாலும் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அவரது ரேசிங் பயணத்தாலும் தனி அடையாளம் பெற்றவர். ஃபார்முலா பிஎம்டபிள்யூ ஆசியா, பிரிட்டிஷ் ஃபார்முலா 3 மற்றும் எஃப்ஐஏ ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல ரேஸ் போட்டிகளில் அவர் பங்கேற்றுள்ளார். சமீபத்தில், தனது சொந்த அணியான அஜித் குமார் ரேசிங் மூலம் சர்வதேச ரேசிங் அரங்கிற்கு வெற்றிகரமாக திரும்பினார். அதாவது, 2025 துபாய் 24H எண்ட்யூரன்ஸ் போட்டியில் 991 பிரிவில் P3 இடத்தையும், கிரெவென்டிக் 24 ஹவர்ஸ் யூரோப்பியன் சாம்பியன்ஷிப் 2026 தொடரில் முகெல்லோ சுற்றில் P3 மற்றும் ஸ்பா-ஃபிராங்கோர்சாம்ப்ஸ் சுற்றில் P2 இடத்தையும் பெற்றார்.


பிஈ 6 ஃபார்முலா எடிஷன் உலகின் முதல் ஃபார்முலா ஈ தழுவிய சிறப்பு பதிப்பு எஸ்யுவி ஆகும். எஃப்ஐஏ ஃபார்முலா ஈ உலக சாம்பியன்ஷிப்பில் மகிந்திரா பங்கேற்ற பன்னிரண்டு சீசன்களுக்கு மரியாதை செய்யும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. 282 bhp திறன் கொண்ட ரியர் டிரைவ் மின்சார மோட்டார் மற்றும் 380 Nm டார்க் திறனுடன், இந்த எஸ்யுவி 0–100 கிமீ வேகத்தை வெறும் 6.7 விநாடிகளில் சென்றடையும். ஃபயர்ஸ்டார்ம் ஆரஞ்சு டிராக், பிரீமியம் சூட் லெதரெட் உள் அலங்காரம், 79 kWh பேட்டரி மற்றும் 180 kW அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஆகியவற்றுடன் உயர் செயல்திறன் மற்றும் சிறந்த மின்சார இயக்க அனுபவத்தை இந்த வாகனம் வழங்குகிறது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page