top of page

''கெணத்த காணோம்” — உணர்ச்சிப்பூர்வமான வெற்றி: யோகி பாபுவின் மனமார்ந்த நன்றி!

  • mediatalks001
  • 5 hours ago
  • 1 min read

'

பல ஆண்டுகளாக, நகைச்சுவை நடிகர்களில் வெகு சிலரே தங்களின் comfort zone ஐ விட்டு வெளியே வந்து, உள்ளடக்கத்தை(Content) மையமாகக் கொண்ட முக்கிய நடிகர்களாக தங்களை நிரூபித்துள்ளனர். தமிழ்சினிமாவின் தற்போதைய காலகட்டத்தில் அத்தகைய மாற்றத்தை உருவாக்கியவராக யோகி பாபு இருக்கிறார்.


நகைச்சுவை வேடங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்தாலும், வலுவான கதாநாயகன் கதாபாத்திரங்களிலும் அவர் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார். அவரது சமீபத்திய படம் “கெணத்த காணோம்” விமர்சகர்கள் ரசிகர்களின் பாராட்டில், வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.


இந்த வெற்றிக்கு முழுமுதற் காரணம், தொடர்ந்து பல படங்களில் பிஸியாக இருந்தபோதிலும், இப்படத்திற்காக யோகி பாபு மேற்கொண்ட முழுமையான (360°) ப்ரோமோஷன் ஈடுபாடே ஆகும்.


யோகி பாபு கூறுகையில்:


“இந்தத் தருணம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், அதே நேரத்தில் ஒரு விதமான துயரத்தையும் தருகிறது. இயக்குநர் சுரேஷ் சங்கையா அவர்கள் இந்த வெற்றியை நேரில் காண முடியாமல் இருப்பது என்னை வேதனைப்படுத்துகிறது. ஆனால், அவரின் நோக்கம் ‘கெணத்த காணோம்’ படத்தில் என்றென்றும் உயிருடன் இருக்கும். இந்த வாய்ப்பை எனக்கு அளித்ததற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இதயம் தொடும் இப்படத்தை உருவாக்கிய படக் குழுவிற்கும் என் நன்றிகள். பத்திரிகை மற்றும் ஊடகங்கள் தொடர்ந்து அளித்த ஆதரவு, நகைச்சுவையைத் தாண்டி புதிய பாதையில் செல்ல என்னை ஊக்குவித்தது. இந்த வெற்றி, இனியும் இப்படிப்பட்ட அர்த்தமுள்ள திரைப்படங்களை வழங்க என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது.”

Comments


©2020 by MediaTalks. 

bottom of page