top of page

நெட்ஃபிலிக்ஸ் ‘மேட் இன் கொரியா’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்!

  • mediatalks001
  • Mar 24
  • 1 min read

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் ஆங்கிலம் அல்லாத உலகளாவிய டாப் 10 படங்களில் ‘மேட் இன் கொரியா’ படம் முதலிடம் பிடித்துள்ளது. குறிப்பாக, உரிமம் பெற்ற மற்றும் நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் திரைப்படங்கள் ஆகிய இரண்டிலும் முதலிடத்தைப் பிடித்த ஒரே தென்னிந்தியத் திரைப்படம் இதுவாகும்.


இந்த மைல்கல் சாதனையை கொண்டாடும் வகையில் நடைபெற்ற சிறப்பு விழாவில் நடிகர்கள் பிரியங்கா மோகன், ரிஷிகாந்த், இயக்குநர் கார்த்திக் மற்றும் ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் கண்டெண்ட் துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் குழுவினரும் இணைந்து கொண்டாடினர்.


நடிகர்களின் திறமையான நடிப்பு, கண்ணைக்கவரும் காட்சிகள், தமிழ்நாட்டில் இருந்து சியோல் வரை மனதை நெகிழ வைக்கும் செண்பாவின் பயணம் ஆகியவை ‘மேட் இன் கொரியா’ படத்தை ரசிகர்களுக்கு நெருக்கமாக கொண்டு சென்றுள்ளது. இந்த வெற்றியை படக்குழு மகிழ்ச்சியுடன் கொண்டாடியதுடன் சிக்னேச்சர் கொரியன் ஹார்ட் சிம்பலுடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page