top of page

எம்ஜிஆர் முதல் சியான் விக்ரம் வரை… சத்யஜோதி பிலிம்ஸ் அடுத்த அப்டேட்!

  • mediatalks001
  • 4 hours ago
  • 2 min read


தலைமுறைகளை கடக்கும் சத்யஜோதி பிலிம்ஸ்… அடுத்த ஹைலைட் சியான் 63!

தமிழ் திரைப்பட உலகில் பல தலைமுறைகளை கடந்து வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அடுத்த அதிரடியாக, விக்ரம் நடிக்கும் “சியான் 63” படத்தை அறிவித்துள்ளது.


வீனஸ் பிக்சர்ஸ் திரு. டி. கோவிந்தராஜன், திரைக்கதைச் சித்தர் அருளாளர் திரு. ஆர். எம். வீரப்பன் அவர்களின் சத்யா மூவிஸ் மரபையும், கலைவாணர் திரு. என். எஸ். கிருஷ்ணன், திரு. டி. ஜி. தியாகராஜன் போன்ற திரையுலக முன்னோடிகளின் 70 ஆண்டுகால திரையுலக பாரம்பரியத்தையும் தாங்கி நிற்கும் சத்யஜோதி பிலிம்ஸ், எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், கேப்டன் விஜயகாந்த், அஜித் குமார், கார்த்திக், முரளி, தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல தலைமுறை முன்னணி நட்சத்திரங்களுடன் வெற்றிப்படங்களை வழங்கி, தமிழ் திரையுலகில் நீண்ட வரலாறும் உயர்ந்த மரியாதையும் பெற்ற முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இன்றும் திகழ்கிறது.


உத்தம புத்திரன், கல்யாணப் பரிசு, என் அண்ணன், பட்டணத்தில் பூதம், ரிக்ஷாக்காரன், இதயக்கனி, பாட்ஷா, மூன்று முகம், காக்கி சட்டை, பானா காத்தாடி, எம் மகன், விஸ்வாசம், கேப்டன் மில்லர், தலைவன் தலைவி போன்ற தமிழ் சினிமாவின் பல மறக்கமுடியாத மாபெரும் வெற்றி திரைப்படங்களை இன்று வரை தொடர்ந்து அளித்து, இன்றும் தனக்கென தனிப் பெருமையும் வரலாறும் வைத்துள்ளது சத்யஜோதி பிலிம்ஸ்.


தமிழ் சினிமாவின் வணிக வெற்றியும், தரமான உள்ளடக்கமும் ஒருசேர கலந்த படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் இந்த நிறுவனம், புதிய திறமைகளை முன்னிலைப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளது. பார்த்திபன் கனவு, எம் மகன், பானா காத்தாடி போன்ற படங்கள் மூலம் ஸ்ரீகாந்த், பரத், அதர்வா போன்ற நடிகர்களுக்கு திரையுலகில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், தனது அடுத்தடுத்த படங்களின் வரிசையையும் வலுப்படுத்தி வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ், விஷ்ணு விஷால் நடிக்கும் “இரண்டு வானம்”, லெனின் பாண்டியன்,சிவராஜ்குமார் நடிக்கும் புதிய படம் பிரம்மாண்ட முயற்சி ஆகியவற்றின் மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதே சமயம், இந்த நிறுவனத்தின் அடுத்த மாபெரும் அறிவிப்பாக சியான் விக்ரம் அவர்களின் 63வது படமான “சியான் 63” அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, “தி ஃபர்ஸ்ட் ஃப்ளேம்” என்ற ஸ்டைலிஷ் புரோமோ வீடியோ மூலம் வெளியான இந்த அறிவிப்பு, சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.


இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இவர் முன்னதாக விக்ரம் நடித்த “இருமுகன்” படத்தை இயக்கி வணிகரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றவர். 10 வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த பிரம்மாண்ட படத்தை டி. ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கின்றனர். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இணைந்திருப்பதும் இந்த படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.


மேலும், ஒளிப்பதிவாளராக ஆர். டி. ராஜசேகர், கலை இயக்குநராக சூர்யா ராஜீவன், வசனகர்த்தாவாக ஷான் கருப்புசாமி, படத்தொகுப்பாளராக ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி, தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன் ஆகியோர் பணியாற்றுகின்றனர். இவர்களின் தொழில்நுட்ப பங்களிப்பு, படத்தின் காட்சியமைப்பை உலகத் தரத்தில் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மொத்தத்தில், வலுவான கதை, வெற்றிகரமான கூட்டணி, அனுபவமிக்க தொழில்நுட்பக் குழு மற்றும் பிரம்மாண்ட தயாரிப்புடன் உருவாகும் “சியான் 63”, விக்ரம் அவர்களின் திரைப்பயணத்தில் இன்னொரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எம்.ஜி.ஆர் முதல் விக்ரம் வரை வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கும் சத்யஜோதி பிலிம்ஸ், இந்த புதிய அறிவிப்பின் மூலம் மீண்டும் ஒரு மாஸ் மற்றும் கிளாஸ் வெற்றியை நோக்கி தன்னுடைய பயணத்தை உறுதியாக முன்னெடுத்து செல்கிறது.


Comments


©2020 by MediaTalks. 

bottom of page