top of page

கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்தவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்

  • mediatalks001
  • 7 hours ago
  • 1 min read


தப்பாட்டம் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய பப்ளிக் ஸ்டார், மேலும் இப்படத்திற்க்காக x தலம் உரிமையாளர் எலன் மஸ்க்கிடம் பாராட்டையும் பெற்றவர் ஆவார். இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வந்த களவாணி 2 படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். அதுபோல் வரலட்சுமி நடிப்பில் வெளிவந்த ‘டேனி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.


சசிக்குமார் நடிப்பில் வெளி வந்து பல வெற்றிகளை கொண்டாடிய“நந்தன்” திரைப்படத்திலும் சிறந்த கதாப்பாத்திரதில் தன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.


மேலும் பல திரைப்படங்களில் குனச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் மாறுப்பட்ட வேடங்களிலும் பட்டைய கிளப்பியுள்ளார் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்.


தற்ப்போது இயக்குனர் சற்குணம் எழுதி இயக்கிய, புஷ்கர் மற்றும் காயத்ரி படைப்புத் தயாரிப்பாளர்களாகக் கொண்ட 'எக்ஸாம்', தைகாரா என்ற மலைப்பாங்கான, கற்பனையான ஊரில் நடக்கும் ஒரு விறுவிறுப்பான புலனாய்வு மோசடித் திரில்லர் ஆகும். இதில் போலீஸ் அதிகாரியாக மீண்டும் தன் நடிப்பை சிறப்பாகவும் மாஸாகவும் வெளிப்படுத்தியுள்ளார். இத்தொடர் வருகின்ற மே 15 2026 அன்று அமேஸான் ஃரைமில் வெளியாக உள்ளது. பார்வையாளர்களும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page