MediaTalks Logo
Header Advertisement
cinema news
18 October 2026 at 14:14•17 Views

விஜயதசமிக்கு சோனி விழாவில் அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி'

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
 விஜயதசமிக்கு சோனி விழாவில்  அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி'

இந்த விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படத்தை வரும் அக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சோனி விழா தொலைக்காட்சி ஒளிபரப்புகின்றது.

அதிரடி ஆக்‌ஷன் மற்றும் குடும்பப் பாசம், பழிவாங்குதல் கலந்த உணர்வுகள் என பல அம்சங்களைக் கொண்ட பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘குட் பேட் அக்லி’ உருவாகியுள்ளது.

தனது கடந்த கால வாழ்க்கையை விட்டுவிட்டு குடும்பத்துடன் அமைதியாக வாழ நினைக்கும் ஒரு முன்னாள் கேங்ஸ்டரின் கதைதான் இப்படம். ஆனால் அவரது மகனுக்குப் பிரச்சனை ஏற்படும்போது அவர் மீண்டும் தான் விட்டுச் சென்ற பழைய உலகத்திற்குள் செல்ல வேண்டிய நிலை உருவாகின்றது.

ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. அஜித் குமார் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் அர்ஜுன் தாஸ், ஜாக்கி ஷெராப், பிரபு, பிரசன்னா, சுனில், பிரியா பிரகாஷ் வாரியர், கார்த்திகேயா தேவ் மற்றும் ரகு ராம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் அதிரடி சண்டைக் காட்சிகள், பழைய நினைவுகளைத் தூண்டும் விஷயங்கள்,ஸ்டைல் மற்றும் மாஸ் பொழுதுபோக்கு என ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் குமாரின் திரைப்படத்தை இந்த விஜயதசமிக்கு ஒளிபரப்புவதன் மூலம் குடும்பத்துடன் இணைந்து ரசிக்கக்கூடிய ஒரு சிறப்பான சினிமா அனுபவத்தை சோனி விழா வழங்குகின்றது.

ராஜாராமன் எஸ்., தென் பிராந்தியங்களுக்கான தலைமை உள்ளடக்க அதிகாரி, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (SPNI) கூறியதாவது,

“விஜயதசமி என்பது குடும்பங்கள் ஒன்றாக இணைந்து கொண்டாடும் ஒரு அழகான பண்டிகை. தமிழ் பொழுதுபோக்கின் சிறப்பைக் கொண்டாடும் வகையில் இந்நாளை மேலும் மகிழ்ச்சியானதாக மாற்ற விரும்பினோம்...அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மூலம் அவரது நட்சத்திர அந்தஸ்து, அதிரடியான ஆக்‌ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் நிறைந்த ஒரு திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்குகிறோம். இந்தப் பண்டிகைக்குப் பொருத்தமான ஒரு சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக இது இருக்கும் நிச்சயமாக.

சோனி விழாவின் பயணம் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும் வகையிலான மறக்க முடியாத பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்குவதே எங்களது நோக்கமாகும். பெரிய திரையில் பார்க்கும் உணர்வையும் உற்சாகத்தையும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களின் வீடுகளுக்குக் கொண்டு செல்வதுடன் தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் குமாரின் திரைப்படத்தைக் கொண்டாடும் மற்றொரு வாய்ப்பையும் இந்த ஒளிபரப்பு ரசிகர்களுக்கு வழங்குகின்றது.”

அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி' திரைப்படத்துடன் இந்த விஜயதசமியைக் கொண்டாடுங்கள்,அக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சோனி விழாவில் மட்டும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: