MediaTalks Logo
Header Advertisement
cinema news
20 October 2026 at 11:43•15 Views

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திகிலூட்டும் ஹாரர் மிஸ்ட்ரி திரைப்படம் '418'

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திகிலூட்டும் ஹாரர் மிஸ்ட்ரி திரைப்படம் '418'

இயக்குநர் பிரசாந்த் நீல் வழங்க, ரவி சங்கர் யலமஞ்சிலி மற்றும் நவீன் யெர்னேனி ஆகியோர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள '418' திரைப்படம், அக்டோபர் 23 அன்று பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. கீர்த்தன் நடாகௌடா இயக்கியுள்ள இந்த ஹாரர் திரில்லர் திரைப்படத்தில் சைத்ரா ஆச்சார், சரண் லக்கராஜு, சூர்ய ராஜ் வீரபதினி, ப்ரீத்தி பகடாலா, சஷாங்க் பாட்டீல் மற்றும் ஸ்ரீ வைஷ்ணவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

பல்வேறு ஜானர்களில் திரைப்படங்களைத் தயாரித்து ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தமிழ் ரசிகர்களுடனான தனது தொடர்பைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

வலுவான கதைக்களம், சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் திரையரங்குகளில் ரசிக்கக்கூடிய அனுபவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் இந்நிறுவனம், தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற படைப்புகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், சஸ்பென்ஸ், மர்மம் மற்றும் திகில் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள '418' திரைப்படத்தின் மூலம் மற்றுமொரு சுவாரஸ்யமான கதையை ரசிகர்களுக்கு வழங்குகிறது.

Image
Image

15 ஆண்டுகளாகப் பூட்டப்பட்டிருக்கும் மருத்துவக் கல்லூரி விடுதியை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. அங்குள்ள அறை எண் 418 ஐச் சுற்றி நிலவும் மர்மம், அறிவியல், மூடநம்பிக்கை மற்றும் விளக்க முடியாத அமானுஷ்ய நிகழ்வுகள் ஆகியவற்றை சுற்றி கதை இருக்கும்.

சுவாரஸ்யமான கதைக்களம், மனதை உலுக்கும் சூழல் மற்றும் இறுதிவரை யூகிக்க முடியாத மர்மம் எனத் திகில் ரசிகர்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தை வழங்க 418 திரைப்படம் கொடுக்கும்.

அறை எண் 418 க்குள் என்ன நடந்தது? அந்த அறை ஏன் 15 ஆண்டுகளாகப் பூட்டப்பட்டுள்ளது, அதன் ரகசியங்களை வெளிக்கொண்டு வரத் துணிபவர்களுக்காக அங்கே என்ன காத்திருக்கிறது என இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அக்டோபர் 23 முதல் திரையரங்குகளில் காணலாம்.

418 திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Image
Image

தொழில்நுட்பக் குழு விவரம்:

வழங்குபவர்: பிரசாந்த் நீல், தயாரிப்பாளர்கள்: ரவி சங்கர் யலமஞ்சிலி மற்றும் நவீன் யெர்னேனி, இயக்குநர்: கீர்த்தன் நடகௌடா, இசையமைப்பாளர்: வெங்கி ஜிஜி, புரொடக்‌ஷன் டிசைனர்: உல்லாஸ் ஹைதூர், தயாரிப்பு நிறுவனம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: