MediaTalks Logo
Header Advertisement
cinema news
24 October 2026 at 11:34•9 Views

இயக்குநர் ஹரி சந்தோஷ் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கும் குடும்ப திரில்லர் திரைப்படம் !

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
இயக்குநர் ஹரி சந்தோஷ் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கும் குடும்ப திரில்லர் திரைப்படம் !

முன்னணி தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரன், டிரைடென்ட் ஆர்ட்ஸின் 22வது படத்தை சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோரோடு இணைந்து தயாரிக்கிறார்

பிரபல கன்னட இயக்குநர் ஹரி சந்தோஷ் இயக்கும் இந்த குடும்ப திரில்லர் திரைப்படத்தில் சசிகுமார், சுவாசிகா, நரேன், நந்திதா ஸ்வேதா, அஞ்சலி நாயர் நடிக்கின்றனர்

தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ஆர். ரவீந்திரன் தலைமையிலான டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தனது 22வது திரைப்படத்தை தொடங்கியுள்ளது. இப்படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் 6 டைமென்ஷன்ஸ் பிலிம்ஸ் & மீடியா எல் எல் பி பேனர்களில் சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோரோடு இணைந்து ஆர். ரவீந்திரன் தயாரிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை பிரபல கன்னட இயக்குநரும் பாடலாசிரியருமான ஹரி சந்தோஷ் இயக்க சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். சுவாசிகா, நரேன், அஞ்சலி நாயர், நந்திதா ஸ்வேதா, ஹரிஷங்கர், ஹரீஷ் பேரடி, தேனப்பன், வையாபுரி, ஆனந்த் நாக் மற்றும் வசந்தி குரு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Image
Image

படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெறவுள்ளது. திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் ஹரி சந்தோஷ், "இது ஒரு புதுமையான குடும்ப திரில்லர் வகையை சேர்ந்த கதை ஆகும். ஒரு திரில்லரில் இதர அம்சங்களை சரியான விகிதங்களில் சேர்த்து பார்வையாளர்கள் ரசிக்கும் வண்ணம் வழங்கவுள்ளோம். தமிழில் எனது முதல் திரைப்படத்திற்காக டிரெடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் சசிகுமார் உள்ளிட்டோரோடு இணைவது மிக்க மகிழ்ச்சி," என்றார்.

கிருஷ் ஜே நாக்ரேச்சா இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் ஆவார். சஞ்சய் விஜய்ராகவன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். ஜிப்ரான் இசையைமக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு: சான் லோகேஷ், கலை: துரைராஜ், உடைகள் வடிவமைப்பு: துர்கா, ஒப்பனை & சிகை அலங்காரம்: மாலிக், , சண்டைப் பயிற்சி: அபிஷேக், பப்ளிசிட்டி டிசைன்ஸ்: வியாகி, பாடல்கள்: கார்த்திக் நேத்தா, வசனம்: மந்த்ரா, மக்கள் தொடர்பு: நிகில் முருகன், கிரியேட்டிவ் புரோமோஷன்ஸ்: ஹரிஹரன் ஜெ (லக்ஸெரான் ஸ்டூடியோஸ்), மார்க்கெட்டிங் & புரோமோஷன்ஸ்: ஏகேடி‍ ‍ ‍- லின்க்.

டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் 6 டைமென்ஷன்ஸ் பிலிம்ஸ் பேனர்களில் ஆர். ரவீந்திரன், சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் தயாரிப்பில் ஹரி சந்தோஷ் இயக்கத்தில் சசிகுமார், சுவாசிகா, நரேன், நந்திதா ஸ்வேதா, அஞ்சலி நாயர் நடிக்கும் குடும்ப திரில்லர் திரைப்படத்தின் பணிகளை விரைவில் நிறைவு செய்து வெளியிட படகுழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: