MediaTalks Logo
Header Advertisement
cinema news
22 November 2026 at 21:14•17 Views

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் தனது மகளின் பத்தாவது பிறந்தநாளை முன்னிட்டு அல்லு அர்ஹாவுக்கு அன்பான வாழ்த்துகளை இணையத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தந்தையும் மகளும் இணைந்திருக்கும் அழகான கருப்பு வெள்ளைப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அல்லு அர்ஜுன், அதனுடன், ’என் வாழ்க்கையின் மகிழ்ச்சியே நீ தான்... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அல்லு அர்ஹா’ எனக் குறிப்பிட்டு தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

Image
Image

தனது குடும்பத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவர் அல்லு அர்ஜுன். தனது குடும்பத்தினருடன் இருக்கும் அழகான தருணங்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்து வரும் அவர், தற்போது வெளியிட்டுள்ள இந்தப் பதிவு அர்ஹாவுக்கும் அவருக்கும் இடையிலான பாசப்பிணைப்பை காட்டியுள்ளது.

அர்ஹாவின் பத்தாவது பிறந்தநாளை முன்னிட்டு, அல்லு அர்ஜுன் தனது குடும்பத்தினருடன் இலங்கைக்குச் சுற்றுலா சென்று பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். பிஸியான திரைப்பணிகளுக்கு மத்தியிலும் குடும்பத்தினருக்காக நேரம் ஒதுக்கி, அவர்களுடன் மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்குவதற்கு அல்லு அர்ஜுன் முக்கியத்துவம் அளித்து வருவது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

குணசேகர் இயக்கத்தில் வெளியான ’சாகுந்தலம்’ திரைப்படத்தில் இளவரசன் பரதனாக நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அர்ஹா. இதுமட்டுமின்றி, தனது ஐந்து வயதிலேயே உலகின் இளம் செஸ் பயிற்சியாளர் என்ற அங்கீகாரத்தைப் பெற்று, நோபல் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸிலும் இடம்பிடித்துள்ளார்.

Image
Image

இந்நிலையில், 10 வயதை எட்டியுள்ள அர்ஹாவுக்கு அல்லு அர்ஜுன் பகிர்ந்துள்ள இந்த அன்பான வாழ்த்துப் பதிவு, சூப்பர் ஸ்டார் பிம்பத்துக்குப் பின்னால் இருக்கும் பாசமிகு தந்தையை ரசிகர்களுக்கு மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. தனது குழந்தைகளின் ஒவ்வொரு வளர்ச்சியையும் கொண்டாடி, அவர்களுடன் நேரத்தைச் செலவிடுவதை விரும்பும் குடும்பத் தலைவராக அல்லு அர்ஜுன் ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளார்.

எத்தனை புகழும் நட்சத்திர அந்தஸ்தும் இருந்தாலும், அல்லு அர்ஜுனைப் பொறுத்தவரை தனது குழந்தைகளின் அன்பான தந்தையாக இருப்பதே மிகச் சிறப்பான அடையாளம்!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: