மார்ச் 21 முதல் அறிமுக இயக்குனர் எஸ்.லாவண்யா இயக்கி இருக்கும் திரைப்படம் 'பேய் கொட்டு'
- mediatalks001
- Mar 9
- 1 min read


மார்ச் 21 முதல் உலகமெங்கும் ரிலீசாகும் திரைப்படம் பேய் கொட்டு (Pei Kottu)
10 உலக சாதனைகள் வாங்கிய திரைப்படம் பேய் கொட்டு (Pei Kottu)
அறிமுக இயக்குனர் எஸ்.லாவண்யா இயக்கி இருக்கும் திரைப்படம் பேய் கொட்டு (Pei Kottu ).லாவண்யா கதையின் நாயகியாக நடித்துள்ளார்.இவருடன் தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி ஆனந்தராஜ், பட்டம்மா, ஆடம், சசிகுமார், இலும்பு செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.சினிமா துறையில் உள்ள 32 துறைகளையும் இயக்குனர் லாவண்யாவே கையாண்டு உள்ளார்.
இதைத் தொடர்ந்து தயாரிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை, வசனம், இசை, டப்பிங், எடிட்டிங், சிங்கிங், ஆக்டிங், பைட், டான்ஸ், கேமரா, லிரிக்ஸ், கலர் கிரேடிங், இ எப் எக்ஸ், வி எப் எக்ஸ், எஸ் எப் எக்ஸ், காஸ்டிங், ஆர்ட், மேக்கப், லொகேஷன் உள்ளிட்ட 32 கிராப்டுகளையும் சுயமாக கற்று பேய் கொட்டு திரைப்படத்தை உருவாக்கி உள்ளார்.இத்திரைப்படம் மார்ச் 21 முதல் உலகமெங்கும் ரிலீசாகிறது.
Comentarios