top of page
mediatalks001

முதன்மை கதாபாத்திரத்தில் தேவயானி மீண்டும் நாயகியாக நடிக்கும் படம் ‘நிழற்குடை’



மீண்டும் நாயகியாக தேவயானி நடிக்கும் படம் ‘நிழற்குடை’



தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.


இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.


தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும், கண்மணி மனோகரன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, கவிதா ரவி, அக்ஷரா ஆகியோருடன் நிஹாரிகா, அஹானா என்கிற இரண்டு குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். மேலும் தர்ஷன் என்ற இளைஞர் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆகிறார்.


இன்றைய இளைய சமூகம் வெளிநாட்டு மோகத்தால் தங்கள் குடும்ப உறவுகளையும் பெற்றோரையும் தங்கள் குழந்தைகளையும் காப்பதில் இருந்து எப்படி எல்லாம் தடம் மாறுகிறார்கள் அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை குடும்பப் பின்னணியில் எதிர்பாராத திருப்பங்களுடன் மர்ம முடிச்சுகளுடன் ஒரு திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த ‘நிழற்குடை’ விரைவில் வெளி வர இருக்கிறது.


சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ‘நிழற்குடை’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது ரிலீஸை நோக்கி போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன


தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரம்*


தயாரிப்பு ; தர்ஷன் பிலிம்ஸ் - ஜோதி சிவா


கதை, திரைக்கதை, இயக்கம் ; சிவா ஆறுமுகம்


வசனம் ; ஹிமேஷ் பாலா


இசை ; நரேன் பாலகுமார்


ஒளிப்பதிவு ; ஆர்.பி குருதேவ்


கலை இயக்குநர் ; விஜய் ஆனந்த்


படத்தொகுப்பு ; ரோலக்ஸ்


மக்கள் தொடர்பு ; A.ஜான்

Comentarios


bottom of page