MediaTalks Logo
Header Advertisement
cinema news
11 October 2026 at 13:17•1 Views

சமூகச் சிந்தனை முதல் சர்வதேச மனிதநேயம் வரை பாடல்களில் பதிவு செய்யும் படைப்பாளரான ஏ. இரமணிகாந்தன்!

MT
mediatalks001
செய்தி ஆசிரியர்
சமூகச் சிந்தனை முதல் சர்வதேச மனிதநேயம் வரை பாடல்களில் பதிவு செய்யும் படைப்பாளரான ஏ. இரமணிகாந்தன்!

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பாடல்களை எழுதி, அவற்றை YouTube வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் பாடலாசிரியர் ஏ. இரமணிகாந்தன், பாடல் இலக்கியத்தின் வழியாகப் பல்வேறு கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்.

காதல், வாழ்க்கை அனுபவங்கள், மனிதநேயம், சமூக விழிப்புணர்வு, சமத்துவம், தன்னம்பிக்கை, இயற்கை மற்றும் உறவுகளின் மேன்மை உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களில் இவர் பாடல்களைப் படைத்து வருகிறார். சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைப்பதுடன், மனிதநேயத்தையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் கருத்துகளுக்கும் தனது படைப்புகளில் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

தமிழில் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் பாடல்களை உருவாக்கி வெளியிடுவது இவரது படைப்புப் பயணத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

உலக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ள தென்னாப்பிரிக்கத் தமிழரான,

சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்காகப் பணியாற்றுபவரான நவநீதம் “நவி” பிள்ளையைப் போற்றும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடல்களை எழுதியுள்ளார்.

தமிழ் பாடல்:

https://youtu.be/6JPqZc_lXGk?si=TqwnAfXQ8DYS6qQ5

English Song:

https://youtu.be/LwwM2jHwBr8?si=bTafS_grhUJGqEXR

உலக அமைதி, மனித உரிமைகள் மற்றும் மனிதநேயம் போன்ற கருத்துகளைப் பாடல்கள் வாயிலாக வெளிப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

தனது பாடல்களை *“Lyricist Ramanigandhan”* என்ற YouTube சேனலில் வெளியிட்டு வரும் இவர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயத்தப் பாடல்களை ( Song Library ) வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

திரைப்படப் பாடல்கள் எழுதுவதுடன், சமூக அக்கறை மிக்க பாடல்கள், வாழ்வியல் சிந்தனைகள் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டும் படைப்புகள் மூலமாகவும் தனது பாடல் இலக்கியப் பயணத்தை விரிவுபடுத்தி வருகிறார்.

மொழிகளைக் கடந்து மனித உணர்வுகளையும் சமூகச் சிந்தனைகளையும் பாடல்களின் வழியாக வெளிப்படுத்தி, தனது படைப்புகளைப் பரந்த அளவிலான ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதே தனது நோக்கம் எனப் பாடலாசிரியர் ஏ. இரமணிகாந்தன் தெரிவித்துள்ளார்.

*YouTube சேனல்:*

https://youtube.com/@ramanigandhan?si=IVj7NDPvN-bN_2Gg

*மேலும் விவரங்களுக்கு:*

ஏ. இரமணிகாந்தன்

திரைப்படப் பாடலாசிரியர்,

மின்னஞ்சல்: ramanigandhan@gmail.com

தொலைபேசி: 9677289032

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: