top of page

சர்வதேச திரைப்பட விழாவில் திரு. செழியன் அவர்கள் ஒளிப்பதிவு செய்து, இயக்கிய "காகிதமலர்"

mediatalks001
7 hours ago
1 min read

என் கணவர் திரு. செழியன் அவர்கள் ஒளிப்பதிவு செய்து, இயக்கிய "காகிதமலர்" என்னும் திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் "Asian Future" பிரிவில் 'World Premiere' ஆகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


World Premiere-ல் இரண்டு காட்சிகளாக திரையிடப்படுவதற்கும், போட்டிப் பிரிவிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த சுயாதீன திரைப்படம் (Independent Movie) தேர்வு செய்யப்பட்டிருப்பது, இந்தியத் திரைப்படத் துறைக்கும் (Indian Film Industry), தமிழ் திரைப்படத் துறைக்கும் (Tamil Film Industry) பெருமை சேர்க்கும் செய்தியாகும். இந்தச் செய்தி மூலம் படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில் பெருமையுடனும், நன்றியுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.


இந்தப் படத்தில் பணிபுரிந்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், இசை தபஸ் நாயக் அவர்களுக்கும் செழியன் சாரின் உதவியாளர்கள் மணி, ராஜ்கிரண், ஜோசப் இருதயராஜ், R.P. ராஜா, பேச்சியப்பன் அவர்களுக்கும், அறிமுக நடிகர் பராந்தகச் சோழன், அறிமுக நடிகை ஜனனி செண்பகா அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



இத்திரைப்படத்தை அனுப்புவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும், தமது பிஸியான நேரத்திலும் செய்து கொடுத்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் அவர்களுக்கும், எப்போது தொடர்புகொண்டாலும் எனது கோப்புகளைப் (Files) பற்றித் கேட்டு உடனே அனுப்பி வைத்த தபஸ் நாயக் அவர்களுக்கும், D Studioவின் A.L.விஜய் அவர்களின் பங்களிப்பிற்கும், தபாலில் அனுப்புவது தொடர்பான அனைத்து உதவிகளையும் செய்த இயக்குநர் லீனா மணிமேகலை அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."


எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் அவர்களின் உதவியாளர்கள் சங்கத் தமிழன், ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், D Studio கலரிஸ்ட் ராஜசேகர், மேனேஜர் சரவணன், எப்போது என்ன கேள்விகள் அனுப்பினாலும் பூர்த்தி செய்து அனுப்பும் கிருஷ்ணசுவாமி அவர்களுக்கும், என் அன்பான, திறமையான மாணவன் செழியன் என்று எப்போதும் பெருமைப்படும் ஆசான், ஒளிப்பதிவாளர் P. C. ஸ்ரீராம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



அன்புடன்,

திருமதி பிரேமா செழியன்

தயாரிப்பாளர்

Comments


©2020 by MediaTalks. 

bottom of page