top of page

இன்று பெண்களை கெடுப்பது செல்போன் தான் - ‘இது நம்ம குடும்பம்’ இசை வெளியீட்டு விழாவில் பேரரசு ஆவேசம்

mediatalks001
3 hours ago
9 min read

CCC Film International நிறுவனம் சார்பில், சைதன்யா சங்கரன், மரகத சுபா சங்கரன், டாக்டர்.அர்ச்சனா சங்கரன், ஆர்திகா சஙகரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘இது நம்ம குடும்பம்’. இப்படத்தின் கதை, திரைகக்தை, வசனம் எழுதி சைதன்யா சங்கரன் இயக்கியிருக்கிறார். இதில் ஆனந்த் பாபு கதையின் நாயகனாக நடிக்க, நாயகியாக சாஜிதா நடித்திருக்கிறார். இவர்களுடன் மகாநதி சங்கர், தீபக் நம்பியார், சோனியா தாஸ், அன்ரிஷா, தேனி அமுதா, ஐஸ்வர்யா, முத்துக்காளை, கிரேன் மனோகர், சுப்புராஜ், சூர்யா, பாரதி சங்கர், கார்த்திக், அப்துல்லா ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.


கே.பாலச்சந்திரன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு எஸ்.ஆர்.பி.செந்தில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அரவிந்த் படத்தொகுப்பு செய்ய, இணை இயக்குநராக சரவணன் வடிவேல் பணியாற்றியிருக்கிறார். மாரி மனோஜ் நடனக் காட்சிகளை வடிவமைக்க, ஜஸ்டின் ரவி சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். தயாரிப்பு நிர்வாகியாக N.ராமசாமி நாஞ்சில் பணியாற்ற, மக்கள் தொடர்பாளராக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார்.


இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா அக்டோபர் 15 ஆம் தேதி, மாலை, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் முன்னாள் ஆளுநர் டாக்டர்.தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு இசைததகடை வெளியிட்டார். மேலும், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டார்கள்.


நிகழ்ச்சியில் டாக்டர்.தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், “நான் ஒரு நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று அழைக்கப்பட்டவுடன், தேதி எல்லாம் பதினைந்து நாட்களுக்கு முன்பு கொடுக்கப்பட்டு விடுகிறது. ஆனால், சைதன்யா சங்கரன் அவர்கள் 48 மணி நேரத்திற்கு முன்னதாக வர வேண்டும் என்று சொன்னார், இது நம்ம குடும்பம் என்பதால் வந்தேன். இது மகிழ்ச்சியான தருணம். இந்த பக்கம் ஆர்.வி.உதயகுமார், அந்த பக்கம் பேரரசு, இவர்கள் இருவரும் சிறந்த இயக்குநர்கள். ஒரு பக்கம் உதயமாகி, மறுபக்கம் பேரரசாக ஆக வேண்டும் என்பது தான், தாமரையின் ஆசை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நடுவுல தான் நான் இருக்கேன், வர ஸ்டேட்டுக்கு வர வேண்டும் என்று தான் ஆசை, அதனால் தான் இங்கே வந்தேன். நான் சாலிகிராமத்தில் இருப்பது தான் எனக்கும் சினிமாவுக்குமான தொடர்பு, அதிகமான திரைப்படங்கள் பார்ப்பதில்லை. அரசியல் குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால் படிப்பதில் அதிகம் கவனம் செலுத்தினேன், அதனால் சினிமா மீது எனக்கு பெரிய ஆர்வம் இல்லை. அப்போது படித்தவர்கள் தான் அரசியல்வாதிகளாக இருந்தார்கள், இன்று நடிப்பவர்கள் அரசியல்வாதியாக மாறி வருகிறார்கள்.


மருத்துவ கல்லூரியில் படிக்கும் போது எங்கள் கதையே பெரிய கதையாக இருக்கும், இதனால் மற்ற கதைகளை பார்க்க நேரம் கிடைப்பதில்லை. நாங்க படிக்கும் போது ஒரு கதை சொல்வார்கள். ஒரு இயக்குநர் ஒரு மருத்துவரை அழைத்து, இந்த படத்திற்கு கதை எழுதி கொடுங்கள் என்றாராம். அதற்கு அந்த மருத்துவர் எதற்கான என்னை கதை எழுத சொல்கிறீர்கள், என்று கேட்டதற்கு, அந்த இயக்குநர், நான் கதையை தொடங்கி விட்டேன், ஆனால் முடிக்க முடியவில்லை. நீங்கள் பலரது கதையை முடித்து வைத்திருப்பதால் என்னுடைய கதையையும் முடித்துக் கொடுங்கள், என்றாராம். இந்த டாக்டர் அதற்காக வரல. ஆனாலும், கதையில் வரும் பிரச்சனை என்னவென்றால், பட்ட சரசக்கு, கெட்ட சரக்கு என்பது தான் எங்கள் கருத்து. அதனால் தான் வாழ்க்கை கெட்ட வாழ்க்கையாகிவிட்டது என்று நான் நினைக்கிறேன். ஏன் என்றால், கெட்ட சரக்கு ஈரலை எப்படி தாக்குகிறது, என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். எதிர்க்கட்சியும், ஆளும் கட்சியும் எப்படி தாக்கிக் கொள்கிறார்களோ அப்படி தாக்கும். ஆனால், அந்த பாடல் நன்றாக இருந்தது. சங்கரன் தான் தயாரிப்பு, இயக்கம், பாடல்கள் எழுதியுள்ளார்.


அந்த காலத்து சினிமா பாடல்கள் நன்றாக இருக்கிறது, இப்போது உ ள்ள பாடல்கள் அப்படி இல்லை, என்று என்னிடம் ஒருவர் சொன்னார். பாட்டுக்கு மெட்டா, பாட்டுக்கு மெட்டா என்பது போகி துட்டுக்கு பாட்டு என்ற நிலை வந்து விட்டது. நல்ல படம், இது நம்ம குடும்பம் அறிவுரை சொல்லும் காட்சிகள் இருக்கிறது. மிகவும் வருத்தத்திற்குரிய நிகழ்ச்சிகளை காண்பித்து, அதில் இருந்து எப்படி மீண்டு வருவது என்பதை காட்டியிருக்கிறார்கள், வாழ்த்துகள். இயக்குநர் சங்கரனுக்கு வாழ்த்துகள். இனி பல திரைப்படங்களை அவர் எடுக்க வேண்டும். சினிமா துறை என்பது அதிகமாக வளரக்கூடிய துறை. சினிமா துறை மிகப்பெரிய உழைப்புள்ள துறை. நாம் ஒரு படத்தை பார்த்துவிட்டு, நல்லா இல்ல, என்று சாதாரணமாக சொல்லிவிட்டு சென்று விடுகிறோம். ஆனால், அந்த படத்திற்குப் இன்னால் எவ்வளவு பெரிய உழைப்பு, முயற்சி இருக்கிறது, என்று எனக்கு தெரியும். நானும் படத்தொகுப்பு பணிகளில் ஈடுபட்டு இருப்பதால், ஒரு திரைப்படத்திற்கான உழைப்பு எவ்வலவு பெரியது என்று தெரியும்.


என்னை பொறுத்தவரை எந்த துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சினிமாவில் நன்றாக இருப்பவர்கள் திடீரென்று இறக்கும் போது, இவர்கள் உடல்நிலையை சரியாக பார்த்துக் கொள்வதில்லையோ, என்று தோன்றும். எனவே எந்த துறையாக இருந்தாலும், அதில் நாம் மேலே வரும்போது, நம் உடல் நன்றாக இருக்க வேண்டும். நா.முத்துக்குமாரின் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும், அவர் இறந்த போது நான் அவர் வீட்டுக்கு சென்றேன், அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, இருந்தாலும் அங்கு சென்றதற்கு காரணம் அவரது பாடல்கள். எனவே நம் உடலை பார்த்துக் கொள்ள வேண்டும். நானும் என் அப்பாவும் வேறு வேறு கட்சி, எங்கள் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை கூட இருக்காது. இருப்பினும், கடைசி காலத்தில் அவரை பார்த்துக்கொண்டவள் நான். அது எனக்கு பெருமை. ஒரு வயதானவர் ஒரு செல்போன் கடைக்கு வருகிறார். தன் போன் பழுதாகிவிட்டதாக சொல்லி கொடுக்கிறார். அதை பிரித்துப் பார்க்கும் கடைக்காரர், உங்கள் போன் நன்றாக தான் இருக்கிறது, என்கிறார். அப்போது ஏன் என் மகனிடம் இருந்தும், மகளிடம் இருந்தும் போன் வரவில்லை, என்று அந்த பெரியவர் கேட்கிறார். அப்போது போன் சரியாகத்தான் இருக்கிறதா, அவர்கள் தான் போன் பண்ணவில்லையா, என்று கேட்கிறார். தன் பிள்ளைகள் சரியில்லாத நிலையில் கூட, அவர் போன் தான் சரியில்லை என்று நினைக்கிறார், அது தான் குடும்பம். எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும், தங்கள் குடும்பத்தையும், தாய், தந்தையையும் பார்த்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும், நம் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால் தான் எனக்கு பல பிரச்சனைகள் இருந்தாலும் நான் இங்கே வந்ததற்கு இது நம்ம குடும்பம் என்ற தலைப்பு தான் காரணம், என்று நான் நினைக்கிறேன்.


குடும்ப சூழ்நிலை என்றால் நாட்டிற்கு தேவை, குடும்பத்திற்கு தேவை. குடும்பத்தை நல்லபடியாக வைத்துக்கொண்டால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும். நல்லவர்களாக வாழ்வோம், அனுசரனையாக வாழ வேண்டும். கஷ்ட்டப்படுகிறவர்கள் காதில் இரண்டு நல்ல வார்த்தைகளை சொல்லுங்கள். எனவே, இது நல்ல குடும்பம் ஓட வேண்டும், ஓடவில்லை என்றால் ’இது நம்ம குடும்பம்’ என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். எனவே, ’இது நம்ம குடும்பம்’ நல்ல குடும்பமாக வலம் வந்து மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்த படத்தின் 100 வது நாள் நிகழ்ச்சியிலும் நான் பங்கேற்க வேண்டும், என்று கூறி விடைபெறுகிறேன்.” என்றார்.


அமைப்புசார தொழிலாளர்கள் பிரிவின் தமிழ்நாடு மாநில தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், “இது நம்ம குடும்பம் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டாக்டர்.தமிழிசை செளந்தரராஜன் ரசியானவர். ஆனந்த் பாபுவின் பல படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். அவரும் ஒரு மருத்துவராக வந்திருக்க வேண்டியவர், நடிகராகி விட்டார். அவர் இது நம்ம குடும்பத்தின் கதாநாயகனாக நடித்திருப்பது, படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறது. அவர் இருப்பதால் இந்த படத்தை பார்க்க வேண்டும், என்று ஆர்வம் பிறக்கிறது.


சினிமாவுக்கு பின்னால் இருக்க கூடிய உழைப்பு, இயக்குநர்கள், ஹீரோக்கள், ஹீரோயின்கள், இசையமைப்பாளர்கள், இசைத்துறையில் இருக்கும் தொழிலாளர்கள் என்று இவர்களை பார்க்கும் போது சினிமா ஒரு மிகப்பெரிய வரலாறு. அதேபோல், இதற்கான முதலீடு, உழை எல்லாம் பெரியது. இவை அனைத்தும் லாபகரமானதாக இருக்க வேண்டும் என்றால், படங்கள் கமர்ஷியலாக வர வேண்டும். இன்று சினிமாவில் இருக்க கூடியது சமுதாய விசயங்கள், சமுதாயத்தில் இருப்பது சினிமாவில் வருகிறது. சிறு வயதில் சினிமாவுக்காக அப்பாவிடம் அடி வாங்கியிருக்கிறேன். அந்த அளவுக்கு சினிமாவுக்காக நான் இரத்தம் சிந்தியிருக்கிறேன். எல்லாம் துறைகளிலும் சிறப்பாக வர ஒரு பின் பின்னணியில் இருக்க வேண்டும், இயக்குநருக்கு அவரது மனைவி அத்தகையப் பெண்ணாக இருக்கிறார். இந்த படத்தில் பங்கேற்ற் அனைவரும் பெரிய அளவில் வெற்றி பெறப்போகிறார்கள், என்பது உறுதி. இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.


படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சைதன்யா சங்கரன் பேசுகையில், “இது நம்ம குடும்பம் என்று பெயரை கேட்டாலே சந்தோஷமாக இருக்கிறது. சினிமாவும் நம்ம குடும்பம் தான் என்று மேடம் சொன்னாங்க. அதேபோல், இந்த படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர்கள் பேரரசு, ஆர்.வி.உதயகுமார், சுப்பிரமணிய சிவா ஆகியோர் எனக்கு வந்து, என்னை ஆசிர்வதித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் வெற்றியடைய உங்கள் அனைவரது ஒத்துழைப்பும், உறுதுணையும் வேண்டும். ஊடகங்கள் இந்த படத்தை நல்ல முறையில் சிறப்பாக கொண்டு செல்வார்கள், என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த படத்தை வெள்ளித்திரையில் பார்த்து வாழ்த்த வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.


ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “ஒரு குடும்ப நிகழ்ச்சியில் நாம் இணந்திருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் சைதன்யா சங்கரன் தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர். இவர் ஒரு பெரிய ஆள் என்பது இப்போ தான் தெரிகிறது, பெரிய அரசியல் பின்னணி கொண்டவராக இருப்பார் போலிருக்கு. ஒரு நாள் முன்னாடி தான் என்னை அழைத்தார்கள், வந்து விட்டேன். ஒரு நாள் முன்னாடி அழைத்தே இத்தனை பேர் வந்திருக்கிறார்கள், என்றால் இவர் எவ்வளவு பெரிய ஆள் என்று பாருங்கள். நான் டாக்டராக வேண்டியவன். ரூ.4500 கட்ட வேண்டும், அப்போது என் அப்பாவிடம் அந்த பணம் இல்லாததால், நான் இப்போ இயக்குநராகி விட்டேன். அந்த பணம் இருந்திருந்தால் கோயமுத்தூரில் ஏதோ ஒரு மூளையில் டாக்டராக இருந்திருப்பேன். எனக்கு அடுத்த மதிப்பெண் எடுத்தவர் ஈரோட்டில் மருத்துவமனை கட்டியிருக்கிறார். ஆனால், அவரை ஈரோட்டில் நான்கு தெருவில் கூட தெரியாது, என்னை இந்த உலகத்திற்கே தெரியும். அதுதான் கலைத்துறை.


அதேபோல், இன்று நடிப்பவர்கள் அரசியலுக்கு வருவதாக தமிழிசை மேடம் சொன்னார்கள், ஆனால், இன்று படித்தவர்கள் தான் அதிகம் அரசியலில் வருகிறார்கள். யாரை எங்கு எப்போது தூக்கி வைக்க வேண்டும், என்பது படித்தவர்களுக்கு தான் தெரிகிறது. அப்படிப்பட்ட மக்கள் தான் தமிழ்நாட்டு மக்கள். அதன்படி தான் நம்ம முதல்வர் விஜயை தேர்ந்தெடுத்து அவரை முதல்வராக்கியிருக்கிறார்கள். அது தான் நம்ம கலைத்துறையின் வலிமை. வாய்ப்பு சும்மா வந்திராது. வாய்ப்பு வரும், நம்ம படைக்கும் போதே இறைவன் தீர்மானித்திருக்கிறான். டாக்டர் ஆக வேண்டிய வாய்ப்பு கிடைத்தும், டாக்டராக கூடாது என்று என் தலையில் எழுதியிருக்கிறான். ஆனால், ஒரு விஸ்காம் படித்த பையன் முதல்வராக வேண்டும், என்று விஜய் தலையில் இறவைன் எழுதியிருக்கிறான். தமிழ்நாட்டை கடந்த 50 ஆண்டுகளாக சினிமா தான் ஆண்டுக் கொண்டிருக்கிறது. சினிமா சாதாரணமாது இல்லை. சினிமாவில் சொல்லாத விசயங்கள் இல்லை. எம்.ஜி.ஆர், சிவாஜி சொல்லாத கருத்துகளே இல்லை. அண்ணன், தங்கச்சி பாசம், குடும்பம் சார்ந்த பிரச்சனைகள், குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும், ஒரு மனிதன் நல்லவனாக மாற கற்றுக்கொள்வது எப்படி என்பதையும் சினிமா சொல்லிக் கொடுத்தது.


சினிமா பல நல்ல விசயங்களை செய்திருக்கிறது. சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்கிறார்கள், ஏன் என்று நான் கேட்கிறேன். சினிமாக்காரர்கள் மற்றவர்களை விட ஒரு படி உயர்ந்தவர்கள் தான். சினிமாவுக்கு கதை எழுதின அண்ணா முதல்வரானார். வேலைக்காரி படத்திற்கு வசனம் எழுதின கருணாநிதி முதல்வராகி விட்டார். அதில் நடித்த, எம்.ஜி.ஆர், ஜெயலிதா முதல்வரகி விட்டனர். அந்த படத்தை பார்த்து வளர்ந்த விஜயும் இன்று முதல்வராகி விட்டார். சினிமாக்காரர்களை தான் மக்கள் நம்புகிறார்கள், அது தான் உண்மை. சினிமாக்காரர்களுக்கு வீடு கொடுக்க மாட்டார்கள், பெண் கொடுக்க மாட்டார்கள். சினிமாக்காரர்களை கல்யாணம் பண்ண பெண்கள் நன்றாக தான் இருக்கிறார்கள். சினிமா ஒரு குறுகிய வட்டம், நாம் ஒழுக்கம் இல்லாமல் வாழ்ந்தால் பிறர் பார்ப்பார்கள், என்ற பயத்தில் அனைவரும் ஒழுக்கமாக வாழ்கிறார்கள். எனவே சினிமாக்காரர்கள் ஒழுக்கமானவர்கள், என்பதை நான் இங்கே பதிவு செய்கிறேன்.


இது நம்ம குடும்பம் சிறப்பான படமாக இருக்கும் என்று நம்புகிறேன். பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. ஆனந்த் பாபு ஆடி பார்த்திருக்கிறேன், இந்த படத்தில் அவரை நடித்து பார்த்தேன், மிக சிறப்பாக நடித்திருக்கிறார். அனைத்து உணர்வுகளிலும் நன்றாக நடிக்க கூடிய நடிகர் நாகேஷ். அவர் பெற்ற பிள்ளை, இவர் எங்கேயோ இருந்திருக்க வேண்டியது, உச்சத்தில் இருந்திருக்க வேண்டியவர். இவர் ஆடிய நடன அசைவுகளை தான் பிரபுதேவா எல்லாம் ஆட ஆரம்பித்தது. இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார், அவருக்கு என் வாழ்த்துகள். அவரது மனைவியாக நடித்திருக்கும் சாஜித்தாவும் நன்றாக நடித்திருக்கிறார். மகாநதி சங்கர் வேறு ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.


படத்தின் நாயகன் ஆனந்த் பாபு பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், முக்கியமான இந்த விழாவை பெருமைப்படுத்த வந்த மதிப்புக்குரிய டாக்டர்.தமிழை செளந்தராஜன், அண்ணன் ராதகிருஷ்ணன், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சுப்பிரமனணிய சிவா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இது ஒரு வித்தியாசமான படம். இது நம்ம குடும்பம் என்பதற்கான அர்த்தத்தை மக்களை உணர வைக்க படத்தில் பல காட்சிகள் இருக்கிறது. நானும் ஒரு மருத்துவராக ஆகியிருக்க வேண்டும், ஆகாதது விதி. நான் பெங்களூரில் மருத்துவம் படிக்க வேண்டியது. ஆனால், நான் டான்ஸை பெரிசாக்க வேண்டும், என்று விரும்பினேன். அப்போது தான் எனக்கு பட வாய்ப்பு கிடைத்து, அந்த படம் பெரிய வெற்றி பெற்றதால் இன்று நடிகனாகி விட்டேன். அதேபோல், பத்திரிகையாளர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். எனக்கு அப்பா சொல்லிக் கொடுத்த ஒரே பாடம், அவர் எதற்குமே திருப்தியாக மாட்டார், அதே மாதிரி ஒவ்வொரு படமும் எனக்கு ஒரு படி, ஒரு மைல்கல். இந்த படமும் எனக்கு ஒரு மைல்கல். பத்திரிகையாளர்கள் இந்த படத்திற்கு ஆதரவு அளித்து, இந்த மைல்கல்லை நல்லபடியாக கடக்க ஒத்துழைக்க வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.


படத்தின் நாயகி சாஜிதா பேசுகையில், “இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம், நான் கதாநாயகியாக நடிக்கும் முதல் படத்திற்கு நீங்க வந்து ஆதரவளித்ததற்கு நன்றி. இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த சைதன்யா சங்கர் சாருக்கு நன்றி. இந்த படத்தில் நான் நல்லபடியாக நடித்து முடித்த உடனே, கேன்சர் என்ற பெரிய விசயம் என் வாழ்க்கையில் வந்தது. நான் இங்கு வந்து நிற்பேன் என்று நினைக்கவே இல்லை. இப்போது கேன்சரை ஜெயிச்சி இங்கு வந்திருக்கிறேன், இப்படி இங்கு வந்து பேசுவேன் என்று நினைக்கவில்லை. இங்கு என்ன பேச வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. என் வாழ்க்கையில் நடந்ததை சொல்லி விட்டேன். இது நம்ம குடும்பம் படத்தில் மக்கள் படும் கஷ்ட்டங்களை சொல்லியிருக்கிறோம், நான் எனக்கு நடந்த கஷ்ட்டத்தை சொல்லிவிட்டேன், பலர் சொல்லாமல் இருக்கிறார்கள். எனவே இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு வேண்டும், நன்றி.” என்றார்.


இயக்குநர் பேரரசு பேசுகையில், “கதாநாயகி சாஜிதா கொஞ்சம் நேரம் பேசினாலும் மனதை உருக வைத்து விட்டார். கேன்சரை வென்று வந்திருக்கிறார், வெற்றி நிச்சயம். மனிஷா கொய்ராலாவும் கேன்சரால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு தற்போது வெற்றி பயணத்தை தொடர்கிறார். அதுபோல் நீங்களும் உங்கள் வெற்றி பயணத்தை தொடர்வீர்கள். உங்களது பேச்சு நம்பிக்கை அளிக்கிறது. டாக்டர்.தமிழிசை செளந்தரராஜன் மேடம் வந்து வாழ்த்தியதற்கு நன்றி. அவங்க பேசும் போது, படித்தவர்கள் அரசியலுக்கு வந்தார்கள், இப்போது நடிப்பவர்கள் அரசியலுக்கு வருவதாக சொன்னார்கள். ஆனால், இன்று அரசியலில் இருப்பவர்களும் நடிக்க தொடங்கி விட்டார்கள்.


நாகேஷ் நடித்த படத்தில் நான் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறேன், பிறகு ஆனந்த் பாபு சார் நாயகனாக நடித்த படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றினேன். இப்போது ஆனந்த் பாபு சாரின் மகன் நாயகனாக நடிக்கும் படத்தில் நடித்திருக்கிறேன். மூன்று தலைமுறை நடிகர்கள் படங்களில் பணியாற்றியது எனக்கு பெருமை. இன்று தலைப்பு வைப்பதே ஒரு படத்தின் பாதி வெற்றியை தீர்மானித்து விடும். இது நம்ம குடும்பம் அழகான தலைப்பு, இந்த தலைப்புக்காகவே படம் பார்க்க வேண்டும். பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. இந்த படத்தின் பாடல்களை கேட்கும் போது, கண்ணதாசன் நினைவு வந்தது. அந்த அளவுக்கு சிறப்பான வரிகளோடு பாடல்கள் இருக்கிறது. ஒரு குடும்பத்திற்கான கதையோடு பாடல்கள் இருக்கிறது.


இப்போதுள்ள குடும்பங்கள் செல்போன் உடன் இருக்கிறது. ஒரு குடும்பம் என்றால், மகிழ்ச்சி, சோகம், கவலை ஆகியவை இருக்கும். ஆனால், இன்று செல்போனுடன் தான் குடும்பம் இருக்கிறது. இன்று குடும்பத்தாரை பிரிப்பது செல்போன் தான். ஆளுக்கு ஒரு போனை வைத்துக் கொண்டு தனிமையில் வாழ தொடங்கி விட்டார்கள். குடும்பத்தை சீரழிப்பது செல்போன் தான். இந்த நாடு உறுப்பட வேண்டும் என்றால், கலாச்சாரம், பண்பாடு, குடும்பம் சீரழியாமல் இருக்க வேண்டும் என்றால், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஒரே வேண்டுகோள், புல் டாக் டைமை ஒழிக்க வேண்டும். மீண்டும் ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசும் முறை வர வேண்டும். இன்று பெண்களை கெடுப்பது செல்போன் தான். ‘இது நம்ம குடும்பம்’ நல்ல குடும்பமாக இருக்க வேண்டும் என்றால், மத்திய அரசு புல் டாக் டைமை குறைக்க வேண்டும்.


இயக்குநர் சைதன்யா சங்கர் இந்த படத்தின் மூலம் நல்ல கருத்தை சொல்ல வருகிறார். இயக்குநர்களுக்கு பொறுப்பு வேண்டும். சமூகத்தில் ஒரு தவறு நடந்தால் அதை உணர வைப்பது தான் இயக்குநரின் கடமை. கள்ள உறவுகள் தவறானது, அதை நியாயப்படுத்தும் மாதிரி படம் எடுக்க கூடாது. ஆணுக்கு ஆண் உறவு, எங்கயாவது இருக்கும், ஆனால் அதை நாம் நியாயப்படுத்த கூடாது, அப்படிப்பட்ட படங்களை எடுக்க கூடாது. நல்ல விசயத்தை நியாயப்படுத்தலாம், கெட்ட விசயங்களை நியாயப்படுத்தக் கூடாது. உலகத்தில் அனைத்து தவறுகளும், அநியாயங்களும் நடக்கிறது, ஆனால் அதை படத்தில் காட்ட கூடாது, அது சமூகத்திற்கு கேடு. இது நம்ம குடும்பம் என்பது நல்ல உறவு, நல்ல விசயத்தை சொல்லும் படம். இந்த பாடல்களை கேட்கும் போதே அது தெரிகிறது. ஒரு அண்ணன் எப்படி இருக்க வேண்டும், ஒரு அப்பா பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும், உறவுகள் என்பது என்ன, கலாச்சாரம் என்பது என்ன, என்பதை சொல்ல வேண்டும், அதை சொல்வது தான் இயக்குநர். இப்படி ஒரு சூழ்நிலையில், இது நம்ம குடும்பம் என்று தலைப்பு வைத்து, நல்ல கருத்தை சொன்ன இயக்குநர் சைதன்யா சங்கருக்கு என் பாராட்டுகள்.


இந்த ஒரு வருடத்தில் நல்ல கருத்தை சொல்லும், சிறிய படங்கள் வெற்றி பெறுவது மிகப்பெரிய ஆறுதல் தருகிறது. மண்டாடி, மொத ராத்திரி, விஸ்வநாத் & சன்ஸ் என்று பல படங்கள் ஓடுகிறது. மக்கள் ஆதரித்தார்கள், காரணம் நல்ல படங்கள். எனவே நல்ல படங்களை மக்கள் கொண்டாடுவார்கள். அந்த வரிசையில் ‘இது நம்ம குடும்பம்’ படத்தையும் மக்கள் ஆதரிப்பார்கள், பெரிய வெற்றி பெறும்.” என்றார்.


நடிகர் மகாநதி சங்கர் பேசுகையில், “இது நம்ம குடும்பம் படத்தை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. கெட்டவனாகவே என்னை காண்பித்து விட்டு, இப்போது நல்லவனாக நடிப்பது பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆரம்பத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால் தொடர்ந்து அப்படிப்பட்ட வேடமே தருவார்கள், அது தான் சினிமா. இயக்குநர் சைதன்யா சங்கரன் தான், எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்தார். எனக்கு இந்த படத்தில் நடிக்கும் போது, ஆனந்த் பாபு சாரை பார்த்த போது, நான் பார்த்த மைக்கல் ஜாக்சன் ஆனந்த் பாபு சார் தான். இயக்குநர் சைதன்யா சங்கர் போல் நல்ல மனிதரை பார்க்க முடியாது. அவரது கடின உழைப்பு, கடின முயற்சி, என்று இந்த படத்திற்காக அதிகம் ரிஸ்க் எடுத்திருக்கிறார்.


இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் நல்லவன். நான் நல்லவனாக மாறி 15 வருடங்கள் ஆகிறது. ஆனால், நல்லவனாக மாற 12 வருடமானது. குடும்ப தலைவன் நன்றாக இருந்தால் தான், அந்த குடும்பம் நன்றாக இருக்கும். இந்த படத்தில் ஏகப்பட்ட விசயங்கள் சொல்லியிருக்கிறார்கள். அதில், என்னுடைய கதாபாத்திரமும் ஒரு நல்ல விசயத்தை சொல்லியிருக்கிறது. இந்த சமயத்தில் ஒரு நல்ல கருத்துள்ள படம். நிச்சயம் இந்த படத்தை மக்கள் பார்க்க வேண்டும், நன்றி.” என்றார்.


இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசுகையில், “கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், விசு, சேகர் ஆகியோருக்கு பிறகு குரும்ப உறவுகள் பற்றி பேசுவதற்கு இயக்குநர் சைதன்யா சங்கர் வந்திருக்கிறார், மகிழ்ச்சி. குடும்ப அமைப்பு என்பது 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் வந்தது. நில அமைப்பு எப்போது உருவானதோ அப்போது தான் குடும்ப அமைப்பு உருவானது. வேட்டையாடும் போது குடும்ப அமைப்புகளே இல்லை. ஆனால், இப்போது அந்த குடும்ப அமைப்பு உடைகிறது, அதற்கு காரணம் படிப்பு. படிப்பு மிகவும் ஆபத்தானது. படித்தால், சம்பாதிப்பார்கள், சம்பாதித்தால் தனித்து வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள், இதனால் தான் குடும்ப அமைப்பு உடைகிறது. இதை நாம் அறிவால் வெல்ல வேண்டும். அறிவால் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்.


பங்காளிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது தான் மஹாபாரதம். அப்படி இல்லை என்றால் அந்த குடும்பம் எப்படி சிதைந்து போகும் என்பதை சொல்கிறது. சகோதரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொல்வது தான் ராமாயாணம். அப்படி இந்த படத்தில் குடும்ப அமைப்பை காப்பாற்றிக் கொள்ள வேண்டும், என்பதை சைதன்யா சங்கரன் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். ஆனந்த் பாபு சார் சிறந்த நடிகர், அவரது இடம் காலியாக தான் இருக்கிறது. அவர் இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும். இசையமைப்பாளரின் பணி சிறப்பாக இருக்கிறது, அவர் அனுபவம் வாய்ந்தவராக இருக்கிறார். பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. எனவே, படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.


இசையமைப்பாளர் கே.பாலச்சந்திரன் பேசுகையில், “எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த சைதன்யா சங்கரனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இசை ஒரு கடல், அதில் நான் இப்போது தான் நீந்த தொடங்கியிருக்கிறேன். அதற்கு இந்த ஒரு ஜன்மம் பத்தாது. படம் வெற்றி பெற ஆதரவு தர வேண்டும், நன்றி.” என்றார்.


நடிகை சோனியா தாஸ் பேசுகையில், “இதற்கு முன்பு நான் பல படங்களில் நடித்திருக்கிறேன். அதற்கு முன்னதாகவே இந்த படத்தில் நடித்தேன், எனக்கு இந்த வாய்ப்பளித்த சங்கரன் சாருக்கு நன்றி. ஆனந்த் பாபு சாருக்கு பொண்ணாக நடித்திருக்கிறேன். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுத்த சங்கரன் சாருக்கு நன்றி. இது நம்ம குடும்பம் அனைவரது குடும்பமாக இருக்கும், நன்றி.” என்றார்.


நடிகர் முத்துக்காளை பேசுகையில், “இது நம்ம குடும்பம் படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சைதன்யா சங்கரன் சாருக்கு நன்றி. மெட்ராஸில் ஐந்து ரூபாய் கிடைப்பதே பெரிய கஷ்ட்டமாக இருக்கும் காலத்தில் என்னை சும்மா அழைத்து அட்வான்ஸ் கொடுத்தார். தற்போதைய என்னுடைய சூழ்நிலைக்கும் இந்த படத்திற்கும் சம்மந்தம் இருக்கிறது. என்னுடைய ரோல் மாடலாக நாகேஷ் ஐயாவை வைத்துக் கொண்டிருக்கிறேன். அவரது மகனின் படத்தில் நடித்தது மிகப்பெரிய சந்தோஷம். இந்த படம் வெற்றி பெற ஆதரவு அளிக்க வேண்டும்.” என்றார்.


விநியோகஸ்தர் ஜெனிஷ் பேசுகையில், “இது நம்ம குடும்பம் என்ற படத்திற்கு ஏற்ப அவங்க குடும்பத்துடன் படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. படம் நிறைய யோசிக்க வைத்தது. இயக்குநர் தேர்வு செய்த நடிகர்கள் அனைவரும் சிறப்பானவர்களாக இருந்தார்கள். படத்தின் ஒவ்வொரு காட்சியும் நம்மை தொடர்புபடுத்திக் கொள்ள வைத்தது. நடித்தவர்கள் அனைவரும் வாழ்ந்திருக்கிறார்கள். முழுப்படமாக பார்க்க வேண்டிய படம் இது. வாழ்க்கையில் இப்படி எல்லாம் இருக்க வேண்டும், இப்படி எல்லாம் இருக்க கூடாது, என்று அறிவுரை சொல்லியிருக்கிறார்கள். படத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இருக்கிறோம். படம் நிச்சயம் மக்களுக்கான படமாக இருக்கும், நன்றி.” என்றார்.


நடிகை ஐஸ்வர்யா பேசுகையில், “இயக்குநர் சங்கரன் சாருக்கு நன்றி. இதில் எனக்கு ஒரு பாடல் கொடுத்திருக்கிறார். மாஸ்டர் மாரி மனோஜ் சார், சித்திக் சார் ஆகியோருக்கு நன்றி. ஆனந்த் பாபு சாருடன் நடித்தது, ஒரு பாடலுக்கு நடனம் ஆடியது சந்தோஷமாக இருக்கிறது. இது நம்ம குடும்பம் வெறும் கதை அல்ல, வாழ்க்கையின் வரலாறு. அனைவரும் தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page