MediaTalks Logo
Header Advertisement
cinema news
17 October 2026 at 18:54•31 Views

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

MT
MediaTalks
செய்தி ஆசிரியர்
விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், பன்முகத் திறமை கொண்ட நட்சத்திர நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ (Slum Dog: 33 Temple Road) திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

பூரி கனெக்ட்ஸ் (Puri Connects) நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் தயாரித்துள்ள இப்படம், ஏற்கெனவே வெளியான விளம்பரங்கள் மற்றும் முன்னோட்டங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் விறுவிறுப்பான திரைமொழிக்குப் பெயர் பெற்ற இயக்குநர் பூரி ஜெகன்நாத், அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதுவரை வெளியிடப்பட்ட கதாபாத்திர அறிமுகக் காணொளிகள், படத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளன.

இப்படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, படத்தின் விளம்பரப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். இவர்களுடன் தபு, துனியா விஜய், ஜரினா வஹாப், பிரம்ஹாஜீ  , வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கெனவே வெளியான காணொளிகள், படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான முக்கியத்துவம் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளன.

சாம் கே. நாயுடு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்துள்ளார். படத்தொகுப்புப் பணிகளை சந்தோஷ் நூஜில்லா மேற்கொண்டுள்ளார்.

இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகவுள்ளது.

நடிகர்கள்

விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, ஜரினா வஹாப், துனியா விஜய், பிரம்ஹாஜீ  , வி.டி.வி. கணேஷ்.

தொழில்நுட்பக் குழு

எழுத்து மற்றும் இயக்கம்: பூரி ஜெகன்நாத் தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத் & சார்மி கவுர் வழங்குபவர்: சார்மி கவுர் தயாரிப்பு நிறுவனம்: பூரி கனெக்ட்ஸ் (Puri Connects) CEO:  விஷ்ணு ரெட்டி இசை:  ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் ஒளிப்பதிவு: சாம்  கே. நாயுடு படத்தொகுப்பு: சந்தோஷ் நூஜில்லா VFX:  அனில் பாடூரி மக்கள் தொடர்பு : யுவராஜ்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: