மாஸ்டர் மகேந்திரன்வெளியிட்ட 'யமன்' படத்தின் டீசர்!
- mediatalks001
- Jun 3, 2025
- 1 min read

வியப்பூட்டும் புராணத் திரில்லரான 'யமன்' படத்தின் டீசரை வெளியிட்டார் மாஸ்டர் மகேந்திரன்.
கமர்சியல், காதல் அல்லது ஆக்ஷன் படங்களை விட, கான்செப்ட் சார்ந்த திரைப்படங்களைத் தான் இன்றைய ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர். இதன் அடிப்படையில், புராணம், ஸஸ்பென்ஸ், குற்றவியல் மற்றும் திரில்லர் வகை சார்ந்த ‘யமன்’ என்ற புதிய திரைப்படம் திரைக்கு வர உள்ளது.
ஜகன்நாதா பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஜகதீஷ் அம்மாஞ்சி கதாநாயகனாக நடித்து அவரே இப்படத்தை இயக்கியும் இருக்கிறார். “தர்மோ ரக்ஷதி ரக்ஷித:” என்பது இப்படத்தின் டேக்லைன்(தர்மம் தன்னை காக்கிறவனை அந்த தர்மம் காக்கும்). ஸ்ராவணி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே ரசிகர்களிடம் பெரிய ஆர்வத்தை உருவாக்கியது.
புதியதாக, ‘யமன்’ படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. பிரபல நடிகர் மாஸ்டர் மகேந்திரன், கடந்த வியாழக்கிழமை அன்று இந்த டீசரை வெளியிட்டு, படக்குழுவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். டீசரைப் பார்த்தால், இது ஒரு வலுவான புராணம், சஸ்பென்ஸ், குற்றம் மற்றும் திரில்லர் கலந்த திரைப்படம் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது. நகரத்தில் பெண்கள் காணாமல் போவதைப் பற்றி பேசும் சுவாரசியமான இந்தக் கதைக்களத்தில், “யமன்” வேடமணிந்து நடிக்கும் ஒருவருடன் இந்த சம்பவங்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று டீசர் உணர்த்துகிறது. நரகத்தில் கிடைக்கும் தண்டனையை, யமன் பூமியில் கொண்டு வந்து வழங்குவதை போல படம் இருக்கும் என டீசர் உணர்த்துகிறது.
"தர்மத்தோ ஸாக்ஷாத் ப்ரணீதம்( தர்மத்தின் மூலமாகவே அனைத்தும் நேரடியாக வெளிப்படும்)." என்ற உரையாடல், இந்த திரைப்படம் ஒரு புதுமையான, சிந்திக்க வைக்கும் முயற்சியாக அமையப்போவதாக காட்டுகிறது. டீசரில் விஷ்ணு ரெட்டி வங்காவின் சினிமாடோகிராபியும், பவானி ராகேஷின் பின்னணி இசையும் மிகச்சிறப்பாக உள்ளன. இப்படம் குறித்த மேலும் பல அப்டேட்டுகளை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர்கள்:
ஜகதீஷ் அம்மாஞ்சி, ஸ்ராவணி ஷெட்டி, ஆகாஷ் செல்லா மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு:
பதாகை(பேனர்): ஜகன் நாதா பிக்சர்ஸ்.
கதை, இயக்கம், தயாரிப்பு: ஜகதீஷ் அம்மாஞ்சி.
எழுத்தாளர்கள்: ஹரி அல்லாசனி, ஜகதீஷ் அம்மாஞ்சி.
திரைக்கதை: சிவா குந்திராப்பு.
எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர்: ரஜினி அம்மாஞ்சி.
எடிட்டிங்: கே.சி.பி. ஹரி.
ஒளிப்பதிவு: விஷ்ணு ரெட்டி வங்கா.
இசை: பவானி ராகேஷ்.
பி.ஆர்.ஓ: சாய் சதீஷ்.





Comments