MediaTalks Logo
Header Advertisement
cinema news
20 June 2025 at 23:23•1 Views

'ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்' ஜூலை 4, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
'ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்' ஜூலை 4, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது

"வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி” எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜோனாதன் பெய்லி ஜுராசிக் தொடருடனான தனது தனிப்பட்ட தொடர்பையும் அது தன்னை எவ்வாறு கவர்ந்தது என்பதையும் பகிர்ந்து கொள்கிறார்!

நேஷனல், 18 ஜூன் 2025: யுனிவர்சல் பிக்சர்ஸ் (வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி விநியோகம்) ஜுராசிக் உலகத்தில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அடுத்த அத்தியாயமான ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த் ஜூலை 4, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

மூச்சடைக்க வைக்கும் பிர்மமாண்டமான காட்சிகள் மற்றும் கதைக்களம் என இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இது உள்ளது.

எம்மி விருது வென்ற கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள இந்த ஆக்‌ஷன் அட்வென்ச்சர் படத்தில் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்கார்லெட் ஜோஹன்சன், எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றும் ஆலிவர் விருது வென்ற ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி மற்றும் லூனா பிளேஸ் மற்றும் ரூபர்ட் ஃப்ரெண்ட் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கதை ஜுராசிக் வேர்ல்ட் டொமினியனுக்குப் பிறகு வருகிறது. அங்கு மீதமுள்ள டைனோசர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அங்கு தன் இனத்தைப் பெருக்கி இருக்கிறது. அந்தச் சூழலில் இருக்கிற மிகப் பிரம்மாண்டமான மூன்று டைனோசர்கள், மனித இனத்துக்கு அதிசயிக்கத்தக்க உயிர்காக்கும் நன்மைகளைக் கொண்டுவரப்போகும் ஒரு மருந்தின் திறவுகோலைக் கொண்டிருக்கின்றன. இதில் நடிகர் ஜொனாதன் பெய்லி தொல்லுயிரியலாளர் டாக்டர் ஹென்றி லூமிஸாகவும் நடிகர் ஸ்கார்லெட் ஜோஹன்சன் திறமையான இரகசிய செயல்பாட்டு நிபுணர் ஜோரா பென்னட்டாகவும் நடித்துள்ளார்கள். அவர் உலகின் மூன்று மிகப் பெரிய டைனோசர்களிடமிருந்து மரபணுப் பொருளைப் பாதுகாப்பதற்கான ஒரு உயர் ரகசிய பணியில் திறமையான குழுவை வழிநடத்துகிறார். இது ஒரு குடும்பத்தை பாதிக்கிறது. அந்த குடும்பம் எதிர்பாராத விதமாக ஒரு தீவில் சிக்கித் தவிக்கிறார்கள். அங்கு அவர்கள் பல தசாப்தங்களாக உலகத்திலிருந்து மறைக்கப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.

ஜுராசிக் தொடரின் மீதான தனது காதலையும், அது தனது குழந்தைப் பருவத்தில் எவ்வாறு பெரும் பங்கு வகித்தது என்பதையும் பற்றி வரவிருக்கும் 'ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்'தில் டாக்டர் ஹென்றி லூமிஸாக நடித்திருக்கும் எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜொனாதன் பெய்லி பகிர்ந்து கொள்கிறார். “எனக்கு ஐந்து வயதாகும் போது, என் குடும்பத்தினர் என்னை ஜுராசிக் பார்க் படத்திற்கு அழைத்து சென்றனர். இது ஒருவித ஆன்மீக உணர்வைக் கொடுக்கும். ஏனெனில், இது கற்பனை மட்டுமல்ல. நவீன உலகின் கடந்த காலத்துக்கும் இயற்கைக்கும் உள்ள உறவைப் பற்றி பேசியது" என்றார்.

மேலும், "கதாபாத்திரங்கள் மிகவும் வலுவானது. ஸ்பீல்பெர்க் மற்றும் ஜான் வில்லியம்ஸின் இசை என்பதால் என் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தையே இல்லை" என்றார்.

ஜுராசிக் வேர்ல்ட் - புதிய உலகம் வரும் ஜூலை 4, 2025 அன்று வெளியாகிறது!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: