top of page

'பர்த் மார்க்' விமர்சனம் 3. 5 / 5


ராணுவ அதிகாரியான ஷபீர் கல்லாரக்கல் நிறை மாத கர்ப்பிணியான மனைவி மிர்னாவை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டில் உள்ள இயற்கை முறையில் சிகிச்சை அளிக்கும் தன்வந்திரி தாய் சேய் நல மையத்தில் அனுமதிக்கிறார் . அங்குள்ள மருத்துவ சிகிச்சை அளிக்கும் பெண்கள் மிர்னாவுக்கு இயற்கை முறையில் குழந்தை பெற்று கொள்ள ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பயிற்சி அளிக்கின்றனர் .

தான் ஊரில் இல்லாத நேரத்தில் மிர்னாவின் நண்பனால்தான் மிர்னா கர்ப்பிணியானதாக சந்தேகப்படும் ஷபீர் கல்லாரக்கல் குழந்தை பிறந்ததும் அதனை கொன்று விட முடிவு செய்கிறார் .

ஒரு கட்டத்தில் மிர்னாவுக்கு ஷபீர் கல்லாரக்கல் பிறக்க போகும் குழந்தையை கொலை செய்ய இருக்கும் திட்டம் தெரிந்ததும் தங்கியிருக்கும் குடிலை ஷபீர் கல்லாரக்கல் தூங்கும்போது கதவை பூட்டிவிட்டு தீயிட்டு கொளுத்தி விட்டு குழந்தை பிறக்க இருக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி செல்கிறார் .

ஷபீர் கல்லாரக்கல்லும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் வீட்டிலிருந்து தப்பித்து பிறக்க இருக்கும் குழந்தையின் உயிரை காப்பாற்ற ஒடி கொண்டிருக்கும் மிர்னாவை துரத்தி பிடிக்க ஓடுகிறார்.

முடிவில் நிறை மாத கர்ப்பிணியான மிர்னாவை சந்தேகப்பட்ட ஷபீர் கல்லாரக்கல் தன் திட்டப்படி பிறந்த குழந்தையை கொன்றாரா ?

பிறக்க இருக்கும் குழந்தையின் உயிரை காப்பாற்ற ஒடி கொண்டிருக்கும் மிர்னாவுக்கு இறுதியில் குழந்தை எப்படி பிறந்தது ? என்பதை சொல்லும் படம்தான் 'பர்த் மார்க்'

கதையின் நாயகனாக ஷபீர் கல்லாரக்கல் ராணுவ அதிகாரியாக மனைவியை சந்தேகப்படும் கணவனாக பயமுறுத்தும் நடிப்பில் கதாபாத்திரத்துடன் இணைந்து மிரட்டுகிறார் .

நிறை மாத கர்ப்பிணியாக மிர்னா உடல் மொழியில் கர்ப்பிணியாக அனைத்து வித உணர்ச்சிகளுடன் உணர்வுபூர்வமான நடிப்பில் முத்திரை பதிக்கிறார் .

இவர்களுடன் தீப்தி, பொற்கொடி, இந்திரஜித் , வரலக்ஷ்மி என நடித்தவர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .

ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேலின் ஒளிப்பதிவும் , விஷால் சந்திரசேகரின் இசையும் படத்திற்கு பக்க பலம் .

கர்ப்பிணியான மனைவியை சந்தேகப்படும் கணவனின் கதையை மையமாக கொண்டு குழந்தை பெறுவதற்கான இயற்கை முறையில் சிகிச்சை அளிக்கும் பயிற்சியை இயல்பாக திரைக்கதையுடன் பயணிக்கும்படி காட்சிகள் அமைத்து க்ரைம் கலந்த திரில்லர் ஜானரில் பாராட்டும்படி படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன்.

ரேட்டிங் ; 3. 5 / 5

Comments


bottom of page