top of page

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ் ( ACE ) 'படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

  • mediatalks001
  • Mar 17
  • 1 min read



'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'உருகுது உருகுது' எனும் முதல் பாடலும், பாடலுக்கான வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.


இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி .எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு , ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, ஏ. கே. முத்து கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார்.

மலேசியாவில் முழு படப்பிடிப்பும் நிறைவு செய்யப்பட்ட இப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் மற்றும் பிரத்யேக கிளிம்ப்ஸ் ஆகியவை வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. அத்துடன் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'உருகுது உருகுது..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் தாமரை எழுத, பின்னணி பாடகி ஸ்ரேயா கௌசல் மற்றும் பின்னணி பாடகர் கபில் கபிலன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரனின் மயக்கும் மெலோடி பாடலாக உருவாகி இருக்கும் இந்த பாடல்.. அனைத்து தரப்பு இசை ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.


Comments


©2020 by MediaTalks. 

bottom of page