MediaTalks Logo
Header Advertisement
reviews
29 June 2025 at 21:21•1 Views

‘லவ் மேரேஜ்’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘லவ் மேரேஜ்’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.0 / 5.0

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரம் பிரபுக்கு 33 வயதாகியும் திருமணமாகவில்லை.

உடன் இருக்கும்  சொந்த பந்தம் அனைவரும் விக்ரம் பிரபுவிடம் அவரது  கல்யாணத்தை பற்றி  கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவருக்காக பார்க்கும் பெண்கள் எல்லாம் அவரை நிராகரிக்க, ஒருவழியாக கோபிசெட்டிபாளையத்தை  சேர்ந்த சுஷ்மிதா பட் அவரை திருமணம் செய்துக் கொள்ள சம்மதிக்கிறார்.

இந்நிலையில் பெண் வீட்டில் இருவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற, அன்றைய இரவு மாப்பிள்ளை மற்றும் குடும்பத்தார் அங்கேயே தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இதற்கிடையே கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதால், மேலும் சில நாட்கள் பெண் வீட்டிலேயே மாப்பிள்ளை குடும்பத்தார் தங்குகிறார்கள்.

இந்த காலக்கட்டத்தில் சுஷ்மிதாவுடன் பேசி பழக விக்ரம் பிரபு முயற்சிக்கிறார். ஆனால், அவர் விக்ரம் பிரபுவின்  முகம் பார்த்து கூட பேசாமல் தவிர்ப்பதோடு, திடீரென்று ஒரு நாள் இரவோடு இரவாக சுஷ்மிதா வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்து விடுகிறார். குழப்பத்தில் என்ன செய்வதென்று புரியாமல் இருக்கிறார் விக்ரம் பிரபு.

முடிவில் விக்ரம் பிரபுக்கு திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதை கலகலப்பாக சொல்லும் படம்தான் ‘லவ் மேரேஜ்’.

கதையின் நாயகனாக விக்ரம் பிரபு தனக்கு திருமணம் ஆகாததை முகத்தில் காட்டாமல் சமாளிக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். படம் முழுவதும் நடிப்பில் அமைதியாக இருந்தாலும் இறுதியில் பொங்கி எழும் காட்சியில் கூட அளவாக நடித்து ரசிகர்களை கவரும் விக்ரம் பிரபு, நடிப்பில் இதுவரை பார்த்திராத வித்தியாசமான நடிப்பை இந்த படத்தின் மூலம் காட்டியிருக்கிறார்.

கதைகேற்றபடி சிறப்பாக நடித்துள்ள நாயகியாக நடித்திருக்கும் சுஷ்மிதா

நாயகியின் தங்கையாக நடித்திருக்கும் மீனாட்சி தினேஷ், சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சத்யராஜ், ரமேஷ் திலக், கஜராஜ், அருள்தாஸ் என அனைவரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது.

மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறது.

காதல் கதையுடன்  ரசிக்கும்படியான திரைக்கதை அமைப்பில் கலகலப்பான குடும்ப கதையாக படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சண்முக பிரியன்

ரேட்டிங் - 3 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: