MediaTalks Logo
Header Advertisement
reviews
29 June 2025 at 21:57•1 Views

‘கண்ணப்பா’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘கண்ணப்பா’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★4.0 / 5.0

வேடர் குலத்தில் பிறந்து கடவுள் என்பதே இல்லை சாமி சிலைகள் அனைத்துமே கற்கள் என்கிற மனநிலையில் இருக்கும் விஷ்ணு மஞ்சு (திண்ணன்).

வேட்டையாடுவதில் மட்டுமல்லாமல், பல திறமைகளை உள்ளடக்கிய வீரனான விஷ்ணு மஞ்சு சிறு வயதில், தனது நண்பனை நரபலி கொடுத்ததன் விளைவாக கடவுள் என்ற ஒன்று இல்லை என நாத்திகனாக வாழ்கிறார் .

பக்கத்து குடிகளோடு சண்டை, பக்கத்து குடியில் வாழும் நாயகி ப்ரித்தியுடனான காதல் என்று சென்று கொண்டிருக்கும் விஷ்ணு மஞ்சுவின் வாழ்க்கை எந்த இடத்தில் அவரது வாழ்வியல் மாறுகிறது .

கடவுள் சிலையை வெறும் கல்சிலைதான் என்று கூறிக் கொண்டிருந்த விஷ்ணு மஞ்சு எப்படி ஒரு தீவிரமான சிவ பக்தனாக மாறினான் என்பதை சொல்லும் படம்தான் ‘கண்ணப்பா’

கதையின் நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு மஞ்சு, கடவுள் மறுப்பாளராக புரட்சிகரமான வசனங்கள் பேசுவது, போர் வீரராக வேகமான இளைஞனாக, காதலனாக காதல் வயப்பட்டு மயங்குவது, சிவபக்தராக மாறி பக்திபரவசத்தில் உருகுவது என திண்ணன் மற்றும் கண்ணப்பர் உருவங்களை உடல் மொழியில்  தனது இயல்பான நடிப்பில் திண்ணனாக கடவுளை வெறுக்கும் போது வெளிப்படுத்தும் நடிப்புக்கும், கண்ணப்பராகி பக்தியில் உருகும் போது வெளிப்படுத்தும் நடிப்பிலும் வித்தியாசங்களை காட்டி உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கும் விஷ்ணு மஞ்சு பாராட்டும்படியான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் .

கதையின் நாயகியாக சிறப்பாக  நடித்திருக்கும் அழகான ப்ரீத்தி முகுந்தன் .

மகாதேவ சாஸ்திரி என்ற கம்பிரமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோகன் பாபு,  கிராத்தா என்ற வேடர் குல வீரராக நடித்திருக்கும் மோகன் லால் ,சிவனாக நடித்திருக்கும் அக்‌ஷய் குமார் மற்றும் பார்வதியாக நடித்திருக்கும் காஜல் அகர்வால் கதைகேற்ற பொருத்தமான தேர்வு.

விஷ்ணு மஞ்சுவின் தந்தையாக நடித்திருக்கும் சரத்குமார்,  ஐந்து குடிகளில் ஒரு குடியின் தலைவராக சந்துடு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சம்பத்ராம்,  மதுபாலா, முகேஷ் ரிஷி, பிரம்மாஜி, பிரம்மானந்தம், ரகு பாபு, ஐஸ்வர்யா பாஸ்கரன், தேவராஜ், சிவ பாலாஜி, அர்பித் ரங்கா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு.

ஒளிப்பதிவாளர் ஷெல்டன் சாவின் ஒளிப்பதிவும்,  இசையமைப்பாளர் ஸ்டீபன் தேவஸீ இசையும் படத்திற்கு பக்க பலம்.

சிவ பக்தனான கண்ணப்பர் கதையை கதை, திரைக்கதை அமைத்து புதிய கோணத்தில் சொல்லியிருக்கும் விஷ்ணு மஞ்சு, திரை மொழியில் பிரமாண்டமாக சொல்வதற்கான அம்சங்களோடு இன்றைய தலைமுறைகேற்றபடி கதையை கையாண்டிருந்தாலும், கண்ணப்பரின் பக்தியின் ஆழத்தையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

கண்ணப்பர் என்ற சிவபக்தரின் பக்தியை மையமாக கொண்ட கதையுடன்  இதுவரை வெளியான கண்ணப்பர் பற்றிய படங்களில் சொல்லப்படாத பல அறிய விசயங்களை மிக பிரமாண்டமான முறையிலும், வியக்கத்தக்க முறையிலும் சொல்லியிருப்பதோடு, கடவுள் பக்தியை உணர்வுப்பூர்வமாக சிவ பக்தர்களை கவரும் படமாக படத்தை இயக்கியுள்ளார்  இயக்குநர் முகேஷ் குமார் சிங் .

ரேட்டிங் - 3.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: