MediaTalks Logo
Header Advertisement
reviews
10 July 2025 at 10:05•1 Views

“ப்ரீடம்”   - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
“ப்ரீடம்”   - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★4.0 / 5.0

1990ஆம் ஆண்டு இலங்கையில் போர் பதற்ற சுழ்நிலையில்  ராமேஸ்வரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில்  இலங்கை அகதியாக வாழ்கிறார கர்ப்பிணியான  நாயகி லிஜோ மோல்.

சில மாதங்களுக்குப் பிறகு ஒரு பிரட்சைனையில் கைதாகி இலங்கை சிறையில் இருந்து விடுதலையாகும் நாயகன் சசிகுமார்   மனைவி  லிஜோ  மோலை  பார்ப்பதற்காக அகதிகளுடன் சேர்ந்து ராமேஸ்வரம்  வருகிறார்.

இந்நிலையில் 1991 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தல் பிரசாரத்திற்காக ஸ்ரீபெரும்புத்தூர் வரும் முன்னாள் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி தற்கொலைப்படைத் தாக்குதலில் கொலை செய்யப்படுகிறார்.

இந்த கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் இருந்து விசாரணை கைதிகளாக சசிகுமார் உட்பட 45 பேரை  வேலூர் கோட்டைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

வேலூர் கோட்டையில் சிறப்பு சிறை ஒன்றை உருவாக்கி அனைவரையும் கொடுமைப்படுத்தி வருகிறார் ஜெயில் அதிகாரியான தேவ் நாயர்  இந்நிலையில் கைதியாக இருக்கும் வாய் பேச முடியாத மணிகண்டன் தற்கொலை செய்து கொள்கிறார்.

ஜெயில் அதிகாரியான தேவ் நாயரின் வெறித்தனமான செயல்களால்  சசிகுமார் தன்னுடன் இருப்பவர்களுடன் சேர்ந்து சுரங்க பாதை அமைத்து தப்பிச் செல்ல முடிவு எடுக்கிறார்.

முடிவில்  சசிகுமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வேலூர் சிறையில் இருந்து  தப்பிச் சென்றாரா ?

காவல் துறை இவர்களுடைய திட்டத்தை கண்டுபிடித்து சசிகுமார் உட்பட அனைவரையும் தப்ப விடாமல் பார்த்து கண்டதா ?இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் “ப்ரீடம்”

மாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சசிகுமார் எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார். கொடுமை செய்யும் அதிகாரியை எதிர்த்து கோபப்படுவதும் , மனைவி மற்றும் குழந்தைக்காக ஏங்குவதும்  என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்

சசிகுமாரின் மனைவியாக நடித்த லிஜோமோல் ஜோஸ் எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த கூடியவர்  ரசிகர்களின் பாராட்டை பெறும்படி நடிப்பில் ஜொலிக்கிறார் .

ஜெயில் அதிகாரியாக வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்  தேவ் நாயர், இஸ்பெக்டராக வரும் போஸ் வெங்கட் , வக்கீலாக வரும் கேஜிஎஃப் மாளவிகா, ரமேஷ் கண்ணா,  மணிகண்டன் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.

ஜிப்ரானின் இசையில் பாடல் மற்றும் பின்னணி  இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.

என் எஸ் உதயகுமாரின் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்க வைக்கிறது.

1991 ஆம் ஆண்டு ஆளுமை மிக்க மிகப் பெரிய தேசிய தலைவரை தற்கொலை படையால் நடைப் பெற்ற கொலை சம்பவத்தினை மைய கருவாக வைத்து பரபரப்பான திரைக்கதையுடன், அசத்தலான திரில்லர் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சத்யசிவா

ரேட்டிங் :  3 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: