MediaTalks Logo
Header Advertisement
reviews
12 July 2025 at 21:49•1 Views

‘ஓஹோ எந்தன் பேபி’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘ஓஹோ எந்தன் பேபி’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.5 / 5.0

உதவி இயக்குநரான நாயகன் ருத்ரா, ரெடின் கிங்ஸ்லியின் உதவியால் படத்தில் நடிகரான விஷ்ணு விஷாலிடம் இரண்டு கதைகளை  சொல்கிறார் ..

அவர் சொல்லும் இரண்டு கதைகளில்  விஷ்ணு விஷால், காதல் கதையை எதிர்பார்ப்பதால்  தன் வாழ்க்கையில் நடந்த  சொந்த காதல் கதையை விஷ்ணு விஷாலிடம் ருத்ரா ரசிக்கும்படி சொல்ல,,,, . அந்த கதை விஷ்ணு விஷாலுக்கு பிடித்துப் போகிறது .

விஷ்ணு விஷால் ருத்ராவிடம் இரண்டாம் பாதியை சொல்லும்படி கேட்க காதலில் ஏற்பட்ட பிரச்சனையால் காதலியை பிரிந்த ருத்ரா கதையின் முடிவு இதுதான் என விஷ்ணு விஷாலிடம் சொல்கிறார் .

கதையை கேட்ட விஷ்ணு விஷால் இந்தக் கதை நன்றாக இருக்கிறது. மீண்டும் உன் காதலியை சந்தித்து இதனை முழு திரைக்கதை வடிவமாக மாற்றி எடுத்து வந்தால் நான் நடிக்கிறேன் என ருத்ராவிடம் கூறி விடுகிறார்.

முடிவில் விஷ்ணு விஷாலின் வேண்டுகோள்படி பிரிந்துச் சென்ற காதலியை தன் புதிய  பட வாய்ப்புக்காக ருத்ரா மீண்டும் சந்தித்தாரா?,

தன் கனவான இயக்குனராகும் வாய்ப்பு நாயகன் ருதராவுக்கு கிடைத்ததா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘ஓஹோ எந்தன் பேபி’.

கதையின் நாயகனாக  நடித்திருக்கும் அறிமுக நாயகன் ருத்ரா நடிப்பில் தேர்ந்த நடிகராக . பள்ளி மாணவனாக  , கல்லூரி இளைஞராக , இளமை துள்ளும் காதல் நாயகனாக என இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

படத்தில் நடிகராகவே நடித்துள்ள விஷ்ணு விஷால் , கதைகேற்றபடி நாயகியாக நடித்திருக்கும் அழகான மிதிலா பால்கர் ,இயக்குனராக நடிக்கும்  மிஷ்கின் ,சித்தப்பாவாக வரும் கருணாகரன், , ரெடின் கிங்ஸ்லி, கீதா கைலாசம் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்றபடி நடித்துள்ளனர் .

இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது.

ஹரிஷ் கல்யாண் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம்,

ஒரு உதவி இயக்குனரின் காதல் கதையை மையமாக கொண்ட கதையுடன் ரொமான்ஸ் கலந்த காதல் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார்.

ரேட்டிங் - 3.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: