MediaTalks Logo
Header Advertisement
reviews
12 July 2025 at 22:29•1 Views

‘மாயக்கூத்து’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘மாயக்கூத்து’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★4.0 / 5.0

எழுத்தாளர் நாகராஜன் கண்ணன் தான் எழுதும் கதாபாத்திரங்களுக்கு நான்தான்  கடவுள். அவைகளின் தலைவிதியை என்றும் நான் தான் தீர்மானிப்பேன் என சொல்கிறார் ..

பத்திரிகை ஆசிரியரான டெல்லி கணேஷூக்கு எழுத்தாளர் நாகராஜன் கண்ணன் ஒரு தொடர்கதை எழுதி வருகிறார். அந்த கதையில் மூன்று விதமான கதாபாத்திரங்களை படைக்கிறார்

கல்விக்கட்டணம் கட்டமுடியாத ஒரு ஏழை மாணவி மிருதுலா மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறார். வீட்டு வேலைக்காரியாக வரும் ஐஸ்வரியா ரகுபதி முதலாளி அம்மாவிடம்   திருட்டுப்பட்டம் வாங்குகிறார். ஒரு பிரபலமானவரை கொலை செய்து அதன்முலம் கிடைக்கும் மிகப் பெரிய தொகைக்காக வேலை செய்துவரும் ரவுடி சாய் தீனா.

ஒரு நாள் இவர் கதையில் உருவாக்கிய கதாபாத்திரங்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தங்களுக்கு நியாயம் வேண்டும் என்று கேட்கிறார்கள். எங்கே சென்றாலும் எழுத்தாளர் நாகராஜன் கண்ணனை பின் தொடர்கிறார்கள்.

இது உண்மையா இல்லையா என்று குழம்பும் நாகராஜன் கண்ணன் தன் கதை மூலமாகவே இந்த சிக்கலுக்கு தீர்வு காண முயற்சிக்கிறார். அதன் பிறகு சம்பவங்களை ரசிக்கும்படி சொல்லும் படம்தான் ‘மாயக்கூத்து’.

எழுத்தாளர் வாசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாகராஜன் கண்ணன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கோபம் , பயம், அச்சம் என அனைத்திலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பதிப்பாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டெல்லி கணேஷ்,  .ரவுடி சாய் தீனா, சிற்பி மு.ராமசாமி, வாசனின் மனைவி காயத்ரி, வேலைக்கார பெண் ஐஸ்வர்யா ரகுபதி ஆகியோர் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது.

அறிமுக படத்திலேயே இசையமைப்பாளராக  அஞ்சனா ராஜகோபாலன்  அனைவரின் கவனத்தை  ஈர்க்கும் இசையை கொடுத்திருக்கிறார்.

சுந்தர் ராம் கிருஷ்ணன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் .

ஒரு எழுத்தாளன் கதையாக எழுதும் கற்பனையான கதாபாத்திரங்கள் நேரில் தோன்றினால் என்ன நடக்கும், என்ற வித்தியாசமான கதைகளத்தை புதிய முயற்சியாக  மிக அழகாக பாராட்டும்படி படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.ராகவேந்திரா

ரேட்டிங் - 3.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: