MediaTalks Logo
Header Advertisement
reviews
13 July 2025 at 11:51•1 Views

’தேசிங்குராஜா 2’  - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
’தேசிங்குராஜா 2’  - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.0 / 5.0

சென்னையில் இன்ஸ்பெக்டராக இருக்கும்  நாயகன் விமல். குற்றவாளிகளுக்கு துணை நிற்பது, லஞ்சம் வாங்குவது, போலீஸ் ஸ்டேஷன் இருக்குமிடத்திற்கு வாடகை கொடுக்காமல் ஏமாற்றுவது என நேர்மையான போலீசுக்கு எதிரான போலீசாக இருக்கிறார்

மற்றொரு ஏரியா போலீஸ் ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டராக இருக்கும் புகழுக்கும் யார் இங்கு பெரிய ஆள் என்ற  போட்டி இருவரிடமும் இருக்கிறது .

இந்நிலையில் பிரபல தாதாவின் மகனை யாரோ மர்மமான முறையில் கொன்று விட, கொன்றது அமைச்சர் ரவிமரியா தான் என்று தவறுதலாக புரிந்து கொள்கிறார் அந்த தாதா .,

அந்த தாதாவிடம் வேலை பார்க்கும் மற்றொரு  நாயகனான  ஜனா அமைச்சர் ரவிமரியா மகனை  கொலை செய்வதாக சவால் விடுகிறார். விமலின் கல்லூரி தோழியான பூஜிதா பொன்னடா போலீஸ் உதவி கமிஷ்னராக வருகிறார்.

அமைச்சர் ரவிமரியாவின் மகனை  பாதுகாக்கும் பொறுப்பு பூஜிதா பொன்னடாவிடம் ஒப்படைக்கப்படுகிறது.

அவர் விமல் தலைமையில் அமைச்சர் மகனுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கிறார். ஆனால், அந்த பாதுகாப்பையும் மீறி சொன்னது போல் ஜனா அவரை கொலை செய்கிறார்.

முடிவில் ஜனா அமைச்சர் ரவிமரியாவின் மகனை கொலை செய்ய காரணம் என்ன? அமைச்சர் ரவிமரியா ஜனாவை பழிவாங்கினாரா? விமல் -பூஜிதா பொன்னடா இருவரின் காதல் கை கூடியதா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’தேசிங்குராஜா 2’

நாயகனாக இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் விமல் கதையுடன் இணைந்து நடிப்பில் ஈடுபாடு இல்லாமல் ஏதோ கடமைக்கு நடிப்பதுபோல ரசிகர்களை  சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்.

மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் ஜனா, காதல், நடனம், ஆக்‌ஷன் என அனைத்தும் திறமையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்,

பெண் வேடம் போட்டு நடித்திருக்கும் புகழ் வரும்  காட்சிகள் அனைத்தும்  எரிச்சலுட்டுகிறது. உதவி போலீஸ் கமிஷனராக வரும் பூஜிதா பொன்னடா, அமைச்சராக நடித்திருக்கும் ரவி மரியா, முதலமைச்சராக நடித்திருக்கும் ஆர்.வி.உதயகுமார், சாம்ஸ், சிங்கம்புலி, லொள்ளு சபா சுவாமிநாதன், கேபிஒய் வினோத், மதுரை முத்து மதுமிதா, வையாபுரி, மொட்டை ராஜேந்திரன் என நட்சத்திர நகைச்சுவை பட்டாளங்கள் இருந்தும் படத்தில் காமெடிக்கு பஞ்சம்.

இசையமைப்பாளர் விதயாசாகரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கேட்பதற்கு இனிமை

செல்வாவின் ஒளிப்பதிவு தரமாக உள்ளது.

விஜய் நாயகனாக துள்ளாத மனமும் துள்ளும்  படம் துவங்கி பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் எழில் 2013 ஆம் ஆண்டு வெளியான தேசிங்கு ராஜா படம் காமெடியில் கலக்கிய வெற்றிப்படமாக அவருக்கு அமைந்தது.

12 வருடங்களுக்கு  பிறகு  இரண்டாம் பாகமாக ’தேசிங்குராஜா 2’ வை ரசிகர்கள் எதிர்பார்த்து சென்றால் கதையில் எந்த லாஜிக்கும் பார்க்காமல் முழுக்க காமெடி படமாக உருவாக்க முயற்சி செய்துள்ளார் .

ரேட்டிங் -2.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: