‘ஜென்ம நட்சத்திரம்’ - விமர்சனம்

காதலர்களான தமன் – மால்வி மல்ஹோத்ரா இருவரும் திருமணம் செய்து கொண்ட பின் தமனின் நண்பன் அருண் கார்த்தி அவருடைய காதலி ரக்க்ஷா செரின் என ஒரே பங்களாவில் அனைவரும் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் தமனின் மனைவி மால்வி மல்ஹோத்ராவுக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வருவதோடு, சில பயங்கரமான உருவங்களும் கனவில் வருகிறது .
இந்நிலையில் தமன் சினிமா இயக்குனராகும் வாய்ப்புக்காக தயாரிப்பாளருக்கு கதை சொல்வதற்காக அவர் இருக்குமிடத்திற்கு செல்கிறார் .
மற்றொரு பக்கம் எம் எல் ஏ வேலராமமூர்த்தியிடம் வேலை செய்யும் காளி வெங்கடின் மகளுக்கு மருத்துவ அறுவை சிகிச்சைக்காக ரூ. 40 லட்சம் தேவைப்படுகிறது.
இந்த பணத்தை வேலராமமூர்த்தியிடம் கேட்கும் காளி வெங்கட்டுக்கு அவமானம் ஏற்படுகிறது.
தன் மகளின் சிகிச்சைக்காக வேல ராமமூர்த்தியின் கருப்பு பணத்தை காளி வெங்கட். எடுத்து விடுவதால் வேல ராமமூர்த்தியின் ஆட்களால் காளிவெங்கட் கொல்லப்படுகிறார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் காளி வெங்கட் நாயகி மால்வி மல்ஹோத்ராவை சந்தித்து தனது பெண் குழந்தை மருத்துவ சிகிச்சைக்காக 40 லட்சம் தேவைபடுவதாகவும் அதற்கான பணம் 57 கோடி ரூபாய் பாழடைந்த தொழிற்சாலையில் மறைத்து வைத்து உள்ளதாக கூறி விட்டு இறந்து விடுகிறார்.
பணத்தை எடுப்பதற்காக தமன், மால்வி மல்ஹோத்ரா மற்றும் அவர்களது நண்பர்கள் அந்த இடத்திற்கு செல்ல, மால்வி மல்ஹோத்ரா தன் கனவில் பார்க்கும் பயங்கரமான உருவங்களை அந்த இடத்தில் பார்க்கிறார்.
அதே சமயம் தமனுடன் வந்த நண்பர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்கிறார்கள்.
முடிவில் தமன் தன் நண்பர்களை கொலை செய்தது யார் என்பதை கண்டுபிடித்தாரா?
காளி வெங்கட் சொன்ன ரூபாய் 57 கோடி அவருக்கு கிடைத்ததா ?
காளி வெங்கட்டின் மகளை தமன் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘ஜென்ம நட்சத்திரம்’
கதையின் நாயகனாக நடித்திருக்கும் தமன் இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கதைகேற்றபடி சிறப்பாக நடித்திருக்கும் நாயகி மால்வி மல்ஹோத்ரா
தமனின் நண்பராக நடித்திருக்கும் மைத்ரேயா மற்றும் அவரது காதலியாக நடித்திருக்கும் ரக்ஷா ஷெரின், சிவம், அருண் கார்த்தி. காளி வெங்கட், வேல ராமமூர்த்தி, முனீஷ்காந்த் தலைவாசல் விஜய், சந்தான பாரதி, நக்கலைட்ஸ் நிவேதிதா, யாசர் என நடித்த அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்
இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் இசையும் , ஒளிப்பதிவாளர் கே.ஜி ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் ..
விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் அமானுஷ்யம் சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து ஹாலிவுட் பாணியில் திரில்லிங்கான சஸ்பென்ஸ் நிறைந்த திகில் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் மணிவர்மன்
ரேட்டிங் - 3 / 5


