MediaTalks Logo
Header Advertisement
reviews
19 July 2025 at 22:00•1 Views

‘பன் பட்டர் ஜாம்’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘பன் பட்டர் ஜாம்’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.5 / 5.0

நெருங்கிய நண்பர்களான ராஜுவும், மைக்கேலும் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் ஒன்றாக படிக்கின்றனர் .

இந்நிலையில் நாயகன்  ராஜுவும்  தனது சக கல்லுரி மாணவியான நாயகி பவ்யா ட்ரிகாவும் காதலிக்கிறார்கள்.

பவ்யா ட்ரிகாவை ஒருதலையாக காதலிக்கும் நெருங்கிய நண்பனான மைக்கேல், காதல் பிரச்சனையால் ராஜுவிடம் சண்டை போட்டு பிரிகிறார்.

மற்றொரு பக்கம் ராஜுவின் அம்மா சரண்யா பொன்வண்ணன், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் தேவதர்ஷினி மகளான ஆதியாவுக்கும், ராஜுவுக்கும்  திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டு, அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்.

ஆனால்  தேவதர்ஷினி மகளான  ஆதியா விஜே பப்புவை காதலிக்கிறார்.

முடிவில் ராஜு தன் காதலியான  பவ்யா ட்ரிகாவுடனான காதல்   திருமணத்தில் முடிந்ததா ?

இணை பிரியா நண்பனாக இருந்த மைக்கேலுடன் மீண்டும் ராஜு ஒன்று சேர்ந்தாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான்  ‘பன் பட்டர் ஜாம்’

நாயகனாக வரும் ராஜு அறிமுக படத்திலேயே வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.காதல் ,நட்பு, காமெடி, சண்டை,எமோஷனல் என அனைத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகி வரும் பவ்யா ட்ரிகா,அழகிலும் நடிப்பிலும் அனைவரின் கவனத்தை ஈர்க்கிறார்.  மற்றொரு நாயகி நடித்திருக்கும் ஆதியா துறுதுறுவென நடிப்பில் இயல்பாக நடிக்கிறார்

ஆதியாவின் காதலனாக நடித்திருக்கும் விஜே பப்பு, வரும்  காட்சிகள் ரசிக்கவும் சிரிக்கவும் முடிகிறது. நாயகனின் நண்பனாக நடித்திருக்கும் மைக்கேலின் நடிப்பு சிறப்பு

சிறப்பு வேடத்தில் நடித்திருக்கும் விக்ராந்த், வரும் காட்சிகள் ஸ்டைலாகவும் மாஸாகவும்  இருக்கிறது சரண்யா பொன்வண்ணன், தேவர்தர்ஷினி, சார்லி ஆகியோரது அனுபவ நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.

இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பு ..

பாபு குமார் IE ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம்.

காதலில் முடியும் திருமணம், பெரியவர்கள் நிச்சயித்த திருமணம் இதனை கதையாக வைத்து நகைச்சுவை கலந்து குடும்பங்கள்  கொண்டாடும் படமாக பாராட்டும்படி இயக்கியுள்ளார்  இயக்குநர் ராகவ் மிர்தாத்

ரேட்டிங் - 3.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: