’மகா அவதார் நரசிம்மா' - விமர்சனம்

பகவான் விஷ்ணுவை தீவிரமாக வணங்கும் சிறுவன் பிரகலாதனின் கதையுடன் பிரகலாதனின் பக்தியால் அவனது உயிரை காப்பாற்ற விஷ்ணு, நரசிம்மர் அவதாரம் எடுத்து அசுரன் இரண்யகசுபுவை அழிக்கும் படம்தான் ’மகா அவதார் நரசிம்மா’.
சிறுவர்களுக்கு புரியும்படியும், ரசிக்கும்படியும் கதையை படமாக்கியிருப்பதுடன் பிரமாண்டமான அனிமேஷன் காட்சிகள் மூலம் வியக்க வைத்திருக்கிறார்கள்.
பொழுதுபோக்கு மற்றும் குழந்தைகளுக்கான படமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புராண கதைகளை குழந்தைகள் ரசிக்கும்படி குறிப்பாக அனிமேஷனையும், கிளைமாக்ஸில் நரசிம்ம அவதாரமும், அவர் அசுரனை அழிப்பதும் அந்த காட்சிகள் ரசிகர்கள் பார்க்கும்போது கை தட்டல் பெறுகிறது .
வசன உச்சரிப்பு, இசை, காட்சியமைப்பு என அனைத்தையும் சரியாக கையாண்டு சிறந்த புராண அனிமேஷன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள் பட குழுவினர் .
அனைத்து மொழிகளிலும் இதுவரை வந்த பிரகலாதன் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களை இதில் முற்றிலும் மாறுபட்ட வடிவத்திலும், பிரமாண்டமாகவும் உருவாக்கியிருப்பது படத்தை பாராட்டும்படி உள்ளது .
ரேட்டிங் - 3.5 / 5


