MediaTalks Logo
Header Advertisement
reviews
27 July 2025 at 22:50•1 Views

‘தலைவன் தலைவி’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘தலைவன் தலைவி’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.5 / 5.0

மதுரையில் நாயகன் விஜய் சேதுபதியுடன்  அம்மா தீபா சங்கரும் அப்பா சரவணனும் சேர்ந்து பேரரசி பரோட்டா கடை ஒன்றை நடத்தி வருகின்றனர்.

விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.

விஜய் சேதுபதி - நித்யா மேனன்  இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கிய சில மாதங்களிலேயே, குடும்பங்களில் வழக்கமாக ஏற்படும் சிறு சிறு சண்டை சச்சரவுகளாலும், அதனால் நடக்கக்கூடிய சம்பவங்களாலும் பிரிந்து விடுகிறார்கள்.

விஜய் சேதுபதியுடன் ஏற்பட்ட பிரச்சனையில் பிரிந்த நித்யா மேனன் விஜய் சேதுபதியை விவாக ரத்து செய்ய முடிவு செய்கிறார் .

விஜய் சேதுபதி - நித்யா மேனன் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா?

மூன்று மாதங்களாக பிரிந்திருக்கும் இருவருக்கும்  நீதிமன்றம் விவாக ரத்து  அளித்ததா ? இல்லையா?  என்பதை சொல்லும் படம்தான்  ‘தலைவன் தலைவி’.

ஆகாச வீரன் என்ற கதாபாத்திரத்தில் அன்பான கணவராக, அம்மா மீது பாசமான பிள்ளையாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிபடுத்துகிறார் .

நாயகியாக நித்யா மேனன் ,சித்திரை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு ,நாயகனின் பெற்றோர்களாக நடித்திருக்கும் சரவணன் - தீபா சங்கர், நாயகியின் பெற்றோர்களாக நடித்திருக்கும் செம்பன் வினோத் - ஜானகி சுரேஷ் மற்றும் ஆர்.கே.சுரேஷ், காளி வெங்கட், மைனா நந்தினி, வினோத் சாகர், ரோஷினி, செண்ட்ராயன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் தங்களது வழக்கமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணின் இசையமைப்பில் பாடல்களும்  பின்னணி இசையும்  படத்திற்கு பக்க பலம் .

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் ஒளிப்பதிவில்  காட்சிகள் தரம் .

சில குடும்பங்களில் நடக்கும் வழக்கமான குடும்ப சிக்கல்களை  கதையாக வைத்து  கணவன் - மனைவி இருவரின் பாசமான காதலை அழகாக சொல்வதுடன் குடும்ப சண்டை படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் பாண்டி ராஜ் .

ரேட்டிங் -   3 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: