MediaTalks Logo
Header Advertisement
reviews
1 August 2025 at 12:03•1 Views

‘ஹவுஸ் மேட்ஸ்’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘ஹவுஸ் மேட்ஸ்’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.5 / 5.0

காதலர்களான நாயகன் தர்ஷன் – அர்ஷா சாந்தினி பைஜூ இருவரும் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு வேளச்சேரியில் உள்ள F 1 அடுக்குமாடி குடியிருப்பில் சொந்தமான இடத்தில் இருவரும் குடியேறுகின்றனர் .

இந்நிலையில் தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக அந்த வீட்டில்  வாழ்ந்து வரும் நேரத்தில் நாயகி அர்ஷா சாந்தினி பைஜூவிற்கு   அந்த வீட்டில் சில அமானுஷ்ய சக்தி இருப்பது போல சில பிரட்சனைகள நடைபெறுகிறது .

ஒரு கட்டத்தில் அது பேய்களின் வேலை இல்லை என தெரிய வருகிறது.

அதே  F 1 அடுக்குமாடி குடியிருப்பில்

காளி வெங்கட்டும், அவரது மனைவி வினோதினியும் அவர்களது 10 வயது மகனுடன் வாழ்கிறார்கள்.

ஒரே வீட்டில் எப்படி இரண்டு குடும்பம் வாழ முடியும். காளி வெங்கட் வாழ்வது 2012ம் ஆண்டில், தர்ஷன் வாழ்வது 2022ம் ஆண்டில் இரு குடும்பமும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.

முடிவில்  2022 ஆம் ஆண்டு வாழ்ந்து வரும் தர்ஷன் – அர்ஷா சாந்தினி பைஜூ  இருவரும் இறுதி வரை வீட்டில் வாழ்ந்தார்களா? அல்லது 2012 ஆம் ஆண்டு வாழ்ந்து வரும்  காளி வெங்கட், – வினோதினி குடும்பம் அந்த வீட்டில் வாழ்ந்தார்களா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான்  ‘ஹவுஸ் மேட்ஸ்’

தர்ஷன் – அர்ஷா சாந்தினி பைஜூ காதலித்து திருமணம் செய்து கொண்ட  கணவன் மனைவியாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

காளி வெங்கட், – வினோதினி இருவருமே கதைகேற்றபடி சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளர்கள் .

தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் என மற்ற வேடங்களில்  நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.

இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு உள்ளது. எம்.எஸ்.சதீஷ் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.

இதுவரை யாரும் தமிழ் திரையில் பார்க்காத கதையாக இரு குடும்பம், வெவ்வேறு ஆண்டுகள் , ஒரே இடம்  இந்த கதையை மையமாக கொண்டு திகில் பேய் படமாக  ஆரம்பத்தில் தொடங்கி காட்சிகள் செல்ல செல்ல வித்தியாசமான திரைக்கதையில் அனைவரும் ரசிக்கும்படி படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் டி.ராஜவேல்

ரேட்டிங் : 3 .2 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: