MediaTalks Logo
Header Advertisement
reviews
3 August 2025 at 15:19•1 Views

’அக்யூஸ்ட்’  - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
’அக்யூஸ்ட்’  -  விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★4.0 / 5.0

அரசியலில் பிரபலமாக இருக்கும் பவனை கொலை செய்த குற்றத்திற்காக உதயா  புழல் சிறையில்  அடைக்கப்பட்டிருக்கிறார்.

உதயாவை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, அழைத்துச் செல்கிறார்கள் போலீஸார்.

அந்த குழுவில் கான்ஸ்டபிளாக இருக்கும் அஜ்மலும் செல்கிறார்.

போலீசார் தங்களது வேனில் பயணிக்கும் போது வாகனம் பழுதடைய அரசு பேருந்தில் பயணம் செல்ல நேரிடுகிறது.

இதற்கிடையே, கைதி உதயாவை கொலை செய்ய வேறு மாநில கும்பல் ஒன்று துரத்துகிறது , உடன் பயணிக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும் உதயாவை கொலை செய்வதற்கு திட்டம் போட  , உடன் இருக்கும் போலீஸ் கான்ஸ்டபிள் அஜ்மல் அதற்கு தடையாக இருக்க , அவரையும்  சேர்த்து கொலை செய்ய முடிவு செய்கிறார்கள்.

முடிவில் கொலை குற்றவாளி உதயா யார்?   அவர் உண்மையில் அரசியல்வாதியை கொலை செய்தாரா ?  அஜ்மல் உதயாவை காப்பாற்றி நீதிமன்றத்தில் உயிருடன் ஒப்படைத்தாரா?இல்லையா?  என்பதை சொல்லும் படம்தான்  ’அக்யூஸ்ட்’

ரவுடி கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் உதயா  இயல்பான நடிப்பில் காதல், சண்டை, நடனம் ,எமோஷனல் என  அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் அஜ்மல்   நேர்மையான போலீசாக துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அறிமுக நாயகியாக நடித்திருக்கும் ஜான்விகா காளக்கேரி, முதல்படம் போல இல்லாமல் நடனம் மற்றும் நடிப்பில்  அசத்துகிறார் .

யோகி பாபு வரும் காட்சிகள் ரசிக்கவும் சிரிக்கவும் முடிகிறது. அரசியல்வாதியாக வரும் பவன், அவரது மனைவியாக நடித்திருக்கும் சுபத்ரா, பவன் தம்பியாக நடித்திருக்கும் ஸ்ரீதர், தயா பன்னீர்செல்வம், இயக்குநர் பிரபு ஸ்ரீனிவாஸ், நாயகனின் அக்காவாக நடித்திருக்கும் தீபா பாஸ்கர், அரசியல்வாதியாக நடித்திருக்கும் டி.சிவா என அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையோடு பயணிக்கிறது.

மருதநாயகம்.ஐ, ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது.

அரசியல் பிரமுகரை  கொலை செய்ததாக கொலை குற்றவாளியாக ஆக்கப்படும் நாயகன், நாயகனை காப்பாற்றும் கான்ஸ்டபிள், அழகான காதல் கதை  இதனை மையமாக  கொண்ட கதையுடன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பிரபு ஸ்ரீனிவாஸ்

மதிப்பீடு : 3 . 3 /  5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: