MediaTalks Logo
Header Advertisement
reviews
3 August 2025 at 15:39•1 Views

‘சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்'- விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்'- விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.5 / 5.0

நாயகன்  வெற்றியின் தந்தையான மதுரையில் இருக்கும் ஜீவன் குமார் குற்றப் புலனாய்வு தொடர்பான நாவலாசிரியர் ஜீவன் குமார்.

ஜீவன் குமாரை பற்றி ‘மனிதம்’ பத்திரிகையில் தொடராக எழுத நினைக்கிறார் நாயகி ஷில்பா மஞ்சுநாத்

இதனையடுத்து  நாயகி ஷில்பா மஞ்சுநாத்திடம்  தந்தையைப் பற்றி தகவல்களை கூறுவதற்காக, சென்னை வருகிறார் வெற்றி.

அங்கு பத்திரிகை ஆசிரியராக இருக்கும் ஷில்பா மஞ்சுநாத்தை  சந்திக்கிறார்.

அதே சமயம், இன்ஸ்பெக்டராக வரும் தம்பி ராமையாவை எதிர்பாராத விதமாக  வெற்றி  சந்திக்க இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட, ஒரு கொலை குற்றத்தை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க வெற்றி உதவி செய்கிறார்.

அப்போது, பெண் நிருபர் ஒருவரும், சில பள்ளி மாணவர்களும் ஒரே மாதிரியாக கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். இந்த தொடர் கொலைகளின் பின்னணியை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் வெற்றி அதை எப்படி கண்டுபிடிக்கிறார்?

இந்த தொடர் கொலைகளுக்கான பின்னணி என்ன?, என்பதை விவரிக்கும் படம்தான் ‘சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்’.

நாயகனான நடித்திருக்கும் வெற்றி இயல்பான நடிப்பில்  போலீசுக்கே உதவி செய்யக் கூடிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.சண்டை காட்சிகலீல் மிரட்டுகிறார் .

பத்திரிகை  ஆசிரியராக நடித்திருக்கும் ஷில்பா மஞ்சுநாத்.  வில்லனாக நடித்திருக்கும் மகேஷ் தாஸ்  வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.

இன்ஸ்பெக்டராக  தம்பி ராமையா. கிங்க்ஸ்லி  மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்றவாறு உள்ளனர்.

இசையமைப்பாளர் ஏஜேஆர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் உளள்து.

அரவிந்த் ஒளிப்பதிவு  கதையோடு பயணிக்க வைக்கிறது.

தொடர் கொலைகளை மைய கருவாக வைத்து சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக  திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் அனிஷ் அஷ்ராப் .

ரேட்டிங்  : 3 /5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: