MediaTalks Logo
Header Advertisement
reviews
3 August 2025 at 16:34•1 Views

'போகி’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
'போகி’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★4.0 / 5.0

நாயகன் நபி நந்தியும், சரத்தும் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து இணைய தளம் சம்பாதிக்கும்  கும்பலை சேர்ந்தவர்களை  கடத்தி கொலை செய்கிறார்கள்.

இந்த மர்ம கொலைகளை விசாரிக்கும் காவல்துறை.கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறது

ஒரு கட்டத்தில் சிறுவயதில் பிரிந்து சென்ற தோழியை பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் நாயகன் நபி நந்தி நாயகி  மீதான தனது காதலை வெளிப்படுத்த முடியாமல் போகிறது.

ஒரு கட்டத்தில்  நாயகன் நபி நந்தி செய்யும்  கொலையை  பார்க்கும் நாயகி அதிர்ச்சி அடைகிறார்.

முடிவில் நாயகன் நபி நந்தி தொடர் கொலை செய்வதற்கான காரணம் என்ன? என்பதை சொல்லும் படம்தான்  ‘போகி’

அறிமுக நாயகனாக நடித்திருக்கும் நபி நந்தி  கதையுடன் இணைந்து தங்கை மீது பாசம், காதலி மீது நேசம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்

முக்கிய கதாபாத்திரத்தில் தங்கையாக நடித்திருக்கும் ஸ்வாசிகா யதார்த்த நடிப்பின் மூலம் கவனம் பெறுகிறார்.

மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் சரத், ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கும் பூனம் ,  காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி வில்லன் கதாபாத்திரத்தில், வித்தியாசமான தோற்றத்தில் பயமுறுத்தும் நான் கடவுள் ராஜேந்திரன், ஒரு காட்சியில் வந்தாலும் சிரிக்க வைக்கும் எம்.எஸ்.பாஸ்கர், மூத்த நடிகர் சங்கிலி முருகன், சினிமா லீ கார்த்தி  என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.

இசையமைப்பாளர் மரியா மனோகர் இசையில், பாடல்கள்  கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது.

ராஜா சி.சேகர் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது.

பாலியல் ரீதியிலான குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள், பழங்குடி இன மக்களின் வலி ,  இறந்த பிறகும் பாலியல் சீண்டல் ஆகியவற்றை மையக்கருவாக வைத்து சமூகத்தில் நடக்கிற உண்மை சம்பவங்களை அழுத்தமாக பதிவு செய்து  படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் விஜயசேகரன்

ரேட்டிங் :   3  / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: