MediaTalks Logo
Header Advertisement
reviews
4 August 2025 at 10:44•1 Views

‘உசுரே' - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘உசுரே' - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.0 / 5.0

ஆந்திராவில் இருக்கும் நாயகன் டீஜெ அருணாசலம் தன் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடி வரும் நாயகி ஜனனியை டீஜே காதலிக்கிறார்.

ஆரம்பத்தில் அவரது காதலை ஏற்க மறுக்கும் ஜனனி பிறகு டீஜெ அருணாசலத்தின் தன்னை மனதார காதலிப்பதை பார்த்து அவரும் டீஜேவை காதலிக்கிறார்.

இவர்களது காதலுக்கு ஜனனியின் அம்மா மந்த்ரா எதிர்ப்பதுடன் டீஜே அருணாசலத்திடம் இருந்து ஜனனியை பிரிப்பதற்காக திட்டம் போடுகிறார். மந்த்ராவின் திட்டப்படி ஜனனி காணாமல் போகிறார் .

முடிவில் டீஜே அருணாசலமும் ,ஜனனியும் இல் வாழ்க்கையில் ஒன்றாக இணைந்தார்களா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான்  ‘உசுரே’.

’அசுரன்’ படத்தில்  நடித்த டீஜே, அருணாசலம் துடி துடிப்புள்ள இளைஞராக காதல் நாயகனாக உருகி உருகி காதலிக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார் .

நாயகியாக நடித்துள்ள பிக் பாஸ் பிரபலம் அழகான ஜனனி சரியான தேர்வு .

நாயகன் அப்பா – அம்மாவாக வரும்  கிரேன் மனோகர், செந்தி குமாரி, .நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் தங்கதுரை, ஆதித்யா கதிர், பாவல் நவகீதன், மெல்வின் ஜெயப்பிரகாஷ் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கிரண் ஜோஷ் இசையில் பாடல்கள், மற்றும்பின்னணி இசை கதைக்கு பக்க பலமாக இருக்கிறது.

மார்க்கி சாய் ஒளிப்பதிவு தரம்

அழகான காதல் கதையுடன் இயல்பான திரைக்கதை அமைப்பில் ரசிக்கும் படி திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் நவீன் டி கோபால்

ரேட்டிங் - 3 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: