MediaTalks Logo
Header Advertisement
reviews
28 August 2025 at 11:14•1 Views

’நறுவீ' - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
’நறுவீ' - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.0 / 5.0

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமம் ஒன்றில் அடர்ந்த காட்டு பகுதியில் ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வரும் நாயகன் ஹரிஷ் அங்குள்ள மலைவாழ் குழந்தைகளுக்கு கல்விக் கற்றுக் கொடுக்கிறார்.

இதற்கிடையே, காதல் ஜோடியான விஜே பப்பு - பாடினி குமார் உள்ளிட்ட இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என ஐந்து பேர் அங்கிருக்கும் நிலத்தில் ஆராய்ச்சி செய்வதற்கு,அங்கு செல்கிறார்கள்.

அவர்கள் தங்கள் பணியை தொடங்கும் போது, அவர்களைச் சுற்றி பல வினோதமான பிரச்சைனைகள் நடக்கிறது. அதே சமயம், அந்த குழுவினர் தங்களை அறியாமலேயே ஆண்களுக்கு ஆபத்து விளைக்கும் வனப்பகுதிக்குள் நுழைந்து விடுகிறார்கள்,

மற்றொரு பக்கம் நாயகன் ஹரிஷிடம் படிக்கும் மாணவி மாதவி தினமும் பள்ளிக்கு தாமதமாக வர அவர் படிப்பதற்காக சில அறிவுரைகளை ஹரிஷ் கூறுகிறார். ஆனால் மாணவியின் தந்தையோ இவருக்கு திருமணம் செய்து முடிவு செய்கிறார்.

ஒரு கட்டத்தில் நாயகன் ஹரிஷ் மற்றும் மாணவி மாதவி இருவரும் திடீர் என காணாமல் போகிறார்கள்.

முடிவில் காணாமல் போன நாயகன் ஹரிஷ் மற்றும் மாணவி இருவரின் நிலை என்ன ? நிலத்தை ஆராய்ச்சி மேற்கொண்டவர்கள் வினோதமான பிரச்சைனை களிருந்து தப்பித்தார்களா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான்’நறுவீ’

ஆசிரியராக நடித்திருக்கும் ஹரிஷ் அலக் அறிமுக நாயகனாக போல இல்லாமல் இயல்பான நடிப்பில் .சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்

விஜே பாபு மற்றும் அவரது காதலியான பாடினி குமார் கதைகேற்றபடி நடிப்பில் எதார்த்தம்.

ஜீவா ரவி, பிரவீனா, கேதே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ்.ராஜா, சாரதா நந்தகோபல் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.

இசையமைப்பாளர் அஸ்வத் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது.

ஆனந்த் ராஜேந்திரன் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.

சஸ்பென்ஸ் திரில்லர் கதையுடன், பெண் குழந்தைகளுக்கு பள்ளி முக்கியம் என்பதை மைய கருவாக வைத்து அமானுஷ்ய சம்பவங்களை வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சுபராக் முபாரக்

ரேட்டிங் : 3/5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: