MediaTalks Logo
Header Advertisement
reviews
31 August 2025 at 11:17•1 Views

‘குற்றம் புதிது’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘குற்றம் புதிது’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.5 / 5.0

காவல்துறையில் உதவி ஆணையராக இருக்கும் மதுசூதனன் ராவின் மகளான நாயகி சேஷ்விதா கனிமொழி, வேலையை முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பும் போது திடீரென்று மாயமாகி விடுகிறார். ஆட்டோவில் வருவதாக தகவல் தெரிவித்த மகள் வீடு திரும்பாததால் கவலை கொள்ளும் மதுசூதனன் ராவுக்கு,போலீசாரிடம் இருந்து மறுநாள் காலையில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் கிடைக்கிறது.

இந்த கொலை வழக்கு குறித்து போலீஸ் தீவிர விசாரணையில் உணவு டெலிவரி வேலை பார்க்கும் தருண் விஜய் மீது போலீசுக்கு சந்தேகம் வர, அவரை விசாரிக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் நாயகன் தருண் விஜய் கொலையாளி இல்லை ஆட்டோ டிரைவர் ராம்ஸ்தான் கொலையாளி என விசாரணையின் போது ,போலீசாருக்கு தெரிய வருகிறது

சில நாட்களுக்கு பின் ஒரு பெண்ணை கொலை செய்துவிட்டதாக கூறி நாயகன் தருண் விஜய் போலீஸில் சரணடைகிறார்.

தருண் விஜய் கொலை செய்ததாக சொல்லும் பெண் சேஷ்விதா கனிமொழியா ? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கும் போலீசுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, இந்த கொலை மட்டும் அல்ல, மேலும் இரண்டு கொலைகள் செய்திருப்பதாக சொல்கிறார் தருண் விஜய்,

இந்நேரத்தில் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் தான் கொலை செய்தவர்களில் சேஷ்விதா கனிமொழியும் ஒருவரா? என்பது தெரியாது, என்று சொல்ல, அவர் கூறிய தகவல்களின் அடிப்படையில் விசாரணையை மேற்கொள்ளும் போலீஸ் அவர் கொலை செய்ததாக சொல்லப்படும் இரண்டு பேரும் உயிருடன் இருப்பதை கண்டுபிடிக்கிறது.

முடிவில், அவர் சொல்லும் மூன்றாவது கொலையில் நாயகி சேஷ்விதா கனிமொழி கொல்லப்பட்டாரா ?

எதற்காக உயிருடன் இருப்பவர்களை கொன்று விட்டதாக போலீசிடம் தருண் விஜய் சரணடைந்தார் ? என்பதை சொல்லும் படம்தான் ‘குற்றம் புதிது’.

நாயகனான நடித்திருக்கும் தருண் விஜய் அறிமுக நாயகன் போல இல்லாமல் இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ,சேஷ்விதா கனிமொழி மாடர்ன் பெண்ணாக கதைகேற்றபடி யூகிக்க முடியாத வேடத்தில்சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் மதுசூதனன் ராவ்,வில்லனாக வரும் நான் மகான் அல்ல ராம்ஸ் ,நிழல்கள் ரவி, பிரியதர்ஷினி ராஜ்குமார் ,பாய்ஸ் ராஜன் என படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கரண் பி கிருபா இசையில் பாடல் மற்றும் பின்னணி இசை கதையோடு பயணிக்கும் விதத்தில் உள்ளது. ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது.

பெண் கொலையை மையப்படுத்தி ஒரு சஸ்பென்ஸ். க்ரைம் த்ரில்லர் ஜானரில் யாரும் யூகிக்க முடியாத விதத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பான திரைக்கதையில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் நோவா ஆம்ஸ்ட்ராங் .

ரேட்டிங் - 3 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: