MediaTalks Logo
Header Advertisement
reviews
13 September 2025 at 22:30•1 Views

‘பிளாக் மெயில்’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘பிளாக் மெயில்’  - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.0 / 5.0

கோவை மாவட்டத்தில் மருந்தக குடோனில் மருந்துகளை டெலிவரி செய்யும் வேலையை செய்யும் நாயகன் ஜி வி பிரகாஷ் குமார் நாயகி தேஜு அஸ்வினியை காதலிக்கிறார்.

இந்நிலையில் உரிமையாளர் முத்துக்குமார் முக்கியமான பார்சல் ஒன்றை

ஜி வி பிரகாஷ் குமாரிடம் கொடுத்து உடனடியாக டெலிவரி செய்யுமாறு கூறுகிறார்.

ஜி வி பிரகாஷ் குமார் பார்சலை வாகனத்தில் வைத்து கொண்டு செல்ல திடீர் என பார்சலுடன் வாகனம் காணாமல் போகிறது.

அதிர்ச்சியடையும் முத்துக்குமார் ஜி.வி. பிரகாஷ் குமாரின் காதலி தேஜு அஸ்வினியை கடத்தி வைத்து காணாமல் போன பார்சல் அல்லது 50 லட்ச ரூபாயை கொடுத்து விட்டு தேஜுஅஸ்வினியை அழைத்துச் செல்லுமாறு கூறுகிறார்.

மற்றொரு பக்கம் பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் இவரது மனைவி பிந்துமாதவி இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

இந்நேரத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நண்பன் ரமேஷ் திலக்குடன் சேர்ந்து பார்சலுடன் தொலைந்து போன வாகனத்தை தேடுகிறார்.

ஒரு கட்டத்தில் ஜி வி பிரகாஷ் குமார் லிங்காவை சந்திக்க,

ஸ்ரீகாந்த் மகளை கடத்தி வந்தால் 50 லட்ச ரூபாய் கொடுப்பதாக சொல்ல , காதலி தேஜுஅஸ்வினியை மீட்பதற்காக குழந்தையை கடத்த ஒப்பு கொள்கிறார்.

முடிவில் ஜி வி பிரகாஷ் குமார் நண்பன் ரமேஷ் திலக்குடன் சேர்ந்து குழந்தையை கடத்த முயற்சி செய்கிறார்.

இறுதியில் பணத்திற்காக ஜி வி பிரகாஷ் குமார் குழந்தையை கடத்தினாரா ? பணத்தை கொடுத்து காதலி தேஜு அஸ்வினியை முத்துக்குமாரிடம் இருந்து மீட்டாரா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘பிளாக் மெயில்’

நாயகனாக ஜி வி பிரகாஷ் குமார் இயல்பான நடிப்பில் கதாபாத்திரத்துடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக வரும் தேஜு அஸ்வினி,தொழிலதிபராக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த் ஸ்ரீகாந்த் மனைவியாக நடித்திருக்கும் பிந்துமாதவி , வில்லனாக வரும் லிங்கா,முத்துக்குமார், நண்பராக வரும் ரமேஷ் திலக் அவரது மனைவியாக வரும் ஹரிப்பிரியா, ஷாஜி,ரெடின் கிங்லி, ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் சந்திரிகா ரவி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணிஇசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.

கோகுல் பினாய் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது.

குழந்தை கடத்தல் கதையை மைய கருவாக வைத்து விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் முழுநீள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மு.மாறன்

ரேட்டிங் - 3 .5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: