MediaTalks Logo
Header Advertisement
reviews
14 September 2025 at 22:39•1 Views

‘பாம்’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘பாம்’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.5 / 5.0

ஒரு காலத்தில் காளகம்மாய்பட்டி கிராம மக்கள் அனைவரும் சாதி பாகுபாடு பார்க்காமல் ஒற்றுமையாக..இருந்துள்ள சமயத்தில் அங்குள்ள மலை உச்சியில் மயில் நிற்பதும் அதன்பின் ஜோதி தெரிவதும் அதனை திருவிழாவாக எடுத்துக் மக்கள் கொண்டாடி வந்துள்ளனர்.

சில வருடங்களுக்கு பிறகு அவர்களுக்குள் பகை வருகிறது.இயற்கைச் சீரழிவால் பெரிய கல் விழுந்து உடைந்து இரண்டாகி அந்த ஊரும் இரண்டாகச் சிதறுகிறது.

கிராம மக்கள் இரு பிரிவுகளாக பிரிந்து பெரிய கல்லை ஒரு கூட்டமும் சிறிய கல்லை மற்றொரு கூட்டமும் எடுத்துக் கொண்டு தெய்வமாக வழிபடுகிறது.

காளக்கம்மாய்ப்பட்டி என்பது காளப்பட்டியாகவும் கம்மாய்ப் பட்டியாகவும் பிரிகிறது

இருபிரிவினருக்கும் அடிக்கடி மோதல் வெடித்துக் கொண்டே செல்கிறது.

வருடங்கள் செல்ல செல்ல மேல் சாதியின் தலைவனாக சிங்கம்புலியும் கீழ் சாதியின் தலைவனாக கிச்சா ரவியும் இருக்கிறார்கள்.

இரு கிராம மக்களையும் ஒன்றிணைக்க நண்பர்களான அர்ஜுன் தாஸ், காளி வெங்கட் போராடுகிறார்கள்.

ஒருகட்டத்தில் காளி வெங்கட் திடீரென உயிரிழந்துபோகிறார்.

அர்ஜுன் தாசை தவிர வேறு யாராலும் காளி வெங்கட்டின் உடலை தூக்க முடியாமல் போகிறது.

இதற்கிடையே, காளி வெங்கட்டின் சடலத்தில் இருந்து அவ்வபோது வாயு வெளியேறுவதோடு, உடலும் அசைகிறது.

இதனால், தன் நண்பர் இறக்கவில்லை என்று கருதும் அர்ஜூன் தாஸ், அவரது உடலை ஊர் பொது இடத்தில் உள்ள மரத்தடியில் எடுத்துச் சென்று வைக்க, கிராமம் திடீரென்று அந்த உடலை சாமி என்று நம்ப ஆரம்பித்து விடுகிறது.

இறந்தவரை சாமி என்று நம்பி, பிரிந்த கிராமம் ஒன்றாக சேர்ந்து வணங்க தொடங்குகிறது. அதன் பிறகு இரு கிராமமும் ஒற்றுமையாக ஒன்றாக இணைந்ததா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘பாம்’.

கதையின் நாயகனான அர்ஜூன் தாஸ் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார் . அதிரடி சண்டையே இல்லாமல்  அமைதியான இயல்பான நடிப்பில் அனைவரின் பாராட்டை பெறுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஷிவாத்மிகா, நண்பராக வரும் காளி வெங்கட் அனுபவ நடிப்பில் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

நாசர், அபிராமி, சிங்கம்புலி, ராட்சசன் சரவணன். பாலசரவணன், விலங்கு ரவி, டி எஸ் கே என படத்தில் நடித்த சின்ன சின்ன கதாபாத்திரங்களும் கதைக்கேற்ற நடிகர்களாக உள்ளனர்.

இசையமைப்பாளர் டி. இமான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.

P.M. ராஜ்குமார் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.

இரு கிராமங்களுக்கு இடையே நடக்கும் சண்டையை மைய கருவாக வைத்து ஆரம்பம் முதல் இறுதிவரை கலகலப்பாக காமெடி கலந்து குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட் .

ரேட்டிங் - 3.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: