MediaTalks Logo
Header Advertisement
reviews
15 September 2025 at 16:11•1 Views

‘தணல்’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘தணல்’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★4.0 / 5.0

சென்னையில் வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பணத்துடன் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் வருகிறது.

இந்நிலையில் மேலிட உத்தரவுபடி போலீஸ்அதிகாரி போஸ் வெங்கட் தலைமையிலான தனிப்படை அவர்களை பிடிக்க செல்ல இரு தரப்பினர்களுக்கிடையே நடக்கும் துப்பாக்கி சூட்டில் கொள்ளையர்கள் 3 பேர் இறந்து விடுகிறார்கள்.

இதனையடுத்து அஸ்வின் காகுமனு போஸ் வெங்கட் தலைமையில் சென்ற தனிப்படை போலீசார் அனைவரையும் கொலை செய்து விடுகிறார்.

நாயகன் அதர்வா புதியதாய் பணியில் சேர காவல் நிலையத்திற்கு வருகிறார் அவருடன் அவரது நண்பர்கள் 5 பேரும் வேலையில் சேர வருகிறார்கள். .

இன்ஸ்பெக்டரின் கெடுபிடியால் ஒரு நாள் முழுக்க போலீஸ் காவல் நிலையத்தில் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

இரவு நேரத்தில் காவல் நிலைய உதவி இன்ஸ்பெக்டர் இரவு ரோந்து பணிக்கு 6 பேரையும் போக சொல்ல அப்போது சாலையில் உள்ள கழிவுநீர் சுரங்கத்தில் இருந்து ஒருவர் வெளியேறுவதை பார்த்து அவரிடம் விசாரிக்க முயற்சிக்கும் போது, அவர் தப்பித்து ஓடுகிறார்.

அவரை பின் தொடர்ந்து ஓடும் 6 பேரும், ஆள் நடமாட்டம் இல்லாத குடிசைப்பகுதிக்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.

அப்போது, அங்கு வரும் அஸ்வின் காகுமனு சிக்கி கொண்ட போலீஸ்காரர்கள் ஒவ்வொருவராக கொலை செய்கிறார்.

அந்த சமயத்தில்அஸ்வின் காகுமனு போலீசாரை பழி வாங்க ஆபத்தை ஏற்படுத்த கூடிய சதித்திட்டத்தை போடுகிறார்.

முடிவில் அஸ்வின் காகுமனு சதித்திட்டத்தை கண்டுபிடித்த அதர்வா அதை முறியடித்தாரா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘தணல்’

நாயகனாக நடித்திருக்கும் அதர்வா இயல்பான நடிப்பில் ஆக்க்ஷன் காட்சிகளில் அதிரடி நாயகனாக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் லாவண்யா திரிபாதி, மிரட்டலான வில்லனாக நடித்திருக்கும் அஸ்வின் காகுமனு,

ஷாரா, செல்வா, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லக்‌ஷ்மி பிரியா சந்திரமெளலி, பாரத், ஷர்வா, தாஃபிக், பிரதீப் கே.விஜயன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் கேட்பதற்கு இனிமை பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.

சக்தி சரவணனின் ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தால் பலமாக இருக்கிறது.

வங்கி கொள்ளை மையமாக கொண்ட கதையுடன் அதன் பின் மிரட்டும் சஸ்பென்ஸ் திரைக்கதையில் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ரவீந்திர மாதவா

ரேட்டிங் : 3.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: