MediaTalks Logo
Header Advertisement
reviews
15 September 2025 at 20:22•1 Views

‘குமார சம்பவம்’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘குமார சம்பவம்’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★4.0 / 5.0

தமிழ் சினிமாவில் இயக்குநராக வேண்டுமென்ற ஆசையில் வாழ்ந்து வரும் நாயகன் குமரன் தியாகராஜன்  பல தயாரிப்பாளர்களிடம் கதை கூறி வருகிறார்.

இவரது கதையை திரைப்படமாக எடுக்க யாரும் முன்வரவில்லை

இந்நிலையில் சமூக போராளியான குமாரவேல் பல வருடங்களாக குமரன் தியாகராஜனுடைய வீட்டு மாடியில் வாடகைக்கு குடியிருக்கிறார்.

குமாரவேல் சமூகப் பிரச்சனைகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து போராடி வருகிறார்.

குமரனுக்கு தயாரிப்பாளர்கள் கிடைக்காததால்  தானே படத்தை தயாரிக்க நினைத்து தாத்தாவின் பூர்வீக வீட்டை விற்க முடிவு செய்கிறார். அதோடு அந்த சொத்தில் ஒரு பங்கை குமரவேலுக்கு கொடுக்க வேண்டும் என்று தாத்தா உயில் எழுதியும் வைத்திருக்கிறார்.

இதனால் குமரன் தியாகராஜனுக்கு கோபம் வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென குமரவேல் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்.

குமரவேல் மரணத்தை கொலைதான் குமரன் தியாகராஜனிடம் போலீஸ் விசாரணைசெய்யும் பட்சத்தில்  குமரவேலை கொலை செய்த குற்றவாளி யார் ?   நாயகன் குமரன்தியாகராஜன்  படத்தை இயக்கினாரா? இல்லையா?  என்பதே ‘குமார சம்பவம்’   படத்தின் மீதிக்கதை.

சின்னத்திரை தொலைக்காட்சியின் பிரபலமான’ பாண்டியன் ஸ்டோர் ‘ சீரியலில் கதாநாயகன் குமரன் இந்த திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.காதல்,காமெடி, செண்டிமெண்ட் , எமோஷனல் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பாயல் ராதாகிருஷ்ணா  அழகாக வந்து அளவான நடிப்பின் மூலம் கவர்கிறார்.

சமூக போராளியாக நடித்திருக்கும் குமரவேல் அழுத்தமான கதாபாத்திரத்தில் அனுபவ நடிப்பின் கவனம் பெறுகிறார்.

தாத்தாவாக வரும் ஜி.எம்.குமார், சிபிஐ அதிகாரியாக நடித்திருக்கும் வினோத் சாகர் வரும் காட்சிகள் காமெடியில் திரையரங்கம் அதிர்கிறது  மற்ற வேடங்ககளில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக உள்ளனர்.

அச்சுராஜா மணியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கும் விதத்தில் உள்ளது.

ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின்  ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறது.

ஒரு கொலையை மைய கருவாக வைத்து சஸ்பென்ஸ் கலந்து இரண்டாம் பாதி முழுக்க முழுநீள காமெடி கலந்த திரைக்கதை அமைப்பில் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்

ரேட்டிங் : 3.5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: