MediaTalks Logo
Header Advertisement
reviews
21 September 2025 at 22:39•1 Views

’கிஸ்' - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
’கிஸ்' - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.5 / 5.0

காதலர்களை கண்டால் கோபமும் அதே நேரத்தில் காதலே பிடிக்காத நாயகன் கவினுக்கு காதல் ஜோடிகள் முத்தம் கொடுப்பதை பார்த்துவிட்டால் அடுத்த நொடியில் அவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளும் திறமை மிக்கவராக இருக்கிறார்.

இந்நேரத்தில் அப்பா ராவ் ரமேஷ்  யாருக்கும் தெரியாமல்  காதலிப்பதை பார்த்து விடும் கவினால்   அம்மா தேவயானி கணவனை  பிரிந்து  வாழ்ந்து வருகிறார்

இந்நேரத்தில் உடன் பிறந்த தம்பியின் காதலையும் பிரித்து விடுகிறார்.

இதற்கிடையே நாயகி ப்ரீத்தி அஸ்ரானியுடன் நட்பாக பழகும் கவின் அவர் மீது காதல் கொள்ள , ப்ரீத்தி அஸ்ரானிக்கும்   கவின் மீது காதல் மலர்கிறது. இருவரும் காதலை சொல்லிக் கொள்ளாத நிலையில், ப்ரீத்திஅஸ்ரானி திடீரென்று கவினுக்கு முத்தக் கொடுத்து விடுகிறார்.

ப்ரீத்தி அஸ்ரானியின் எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது, என்பதை அறிந்துக் கொள்ளும் கவின், அவரை நிராகரிக்கிறார் .

முடிவில் கவின் ப்ரீத்தி அஸ்ரானி காதலை ஏற்றுக்கொண்டாரா?

காதலர்கள் இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை சொல்லும் படம்  ’கிஸ்’ .

நெல்சன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கவின் தொடக்கத்தில் காதலை எதிர்ப்பவராகவும்   அதன் பின் காதல் நாயகனாக பாசம், எமோஷனல்,நடனம் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதைகேற்றபடி சிறப்பான நடிப்பில் நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ரானி .

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஆர்ஜே விஜய் மற்றும் காமெடியில் கலக்கும் தந்தையாக நடித்திருக்கும் விடிவி கணேஷ், நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் ராவ் ரமேஷ் கதாநாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் தேவயானி, பிரபு, கௌசல்யா என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.

இயல்பான   அழகான காதலுடன்  காதலை வெறுக்கும் நாயகனுக்கு காதல் வந்தால்  என்ன நடக்கும் என்பதை விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன்

ரேட்டிங் : 3 .5 / 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: