MediaTalks Logo
Header Advertisement
reviews
26 September 2025 at 11:56•1 Views

‘சரீரம்’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
‘சரீரம்’ - விமர்சனம்
Movie Rating
திரைப்பட மதிப்பீடு
★3.0 / 5.0

கிரானைட் தொழிலதிபர் புதுப்பேட்டை சுரேஷ் மகளான நாயகி சர்மி விஜயலட்சுமியும் நாயகன் தர்ஷன் பிரியனும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள்.

இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்   புதுப்பேட்டை சுரேஷ் தன் அடியாட்களை வைத்து தர்ஷன் பிரியனை கொலை செய்ய முயற்சிக்கிறார்.

அவர்களிடம் இருந்து உயிர் பிழைத்து வாழ வேண்டும் என்பதற்காக நாயகன் தர்ஷன் பிரியன் திரு நங்கையாகவும், நாயகி சர்மிவிஜயலட்சுமி திரு நம்பியாகவும் டாக்டரான ஷகிலாவிடம் உடல் மாற்றத்துக்கான சிகிச்சை  எடுத்து கொள்ள  அவரது மருத்துவமனைக்கு செல்கின்றனர் .

முடிவில் புதுப்பேட்டை சுரேஷுடம் இருந்து உயிர் பிழைத்து வாழ காதலர்கள்   இருவரும் திரு நங்கை யாகவும் ,திரு நம்பியாகவும் டாக்டரான ஷகிலாவிடம் சிகிச்சை  எடுத்து கொண்டார்களா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘சரீரம்’.

நாயகனாக நடித்திருக்கும் தர்ஷன் பிரியன், நடனம், நடிப்பு, ஆக்‌ஷன் என அனைத்திலும் தேர்ந்தவராக கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார் .

நாயகியாக நடித்திருக்கும் சர்மி விஜயலட்சுமி இயல்பான நடிப்பில் அழுத்தமான கதாபாத்திரத்தில்  திறமையாக நடித்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் ஜெ.மனோஜ், நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் ‘புதுப்பேட்டை’ சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜி.வி.பெருமாள் மலைச்சாமி ,கௌரி , மிலா , மதுமிதா  ,என மற்ற வேடத்தில் நடித்திருப்பவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் பாரதிராஜா இசையில் பாடல்கள் மற்றும்  பின்னணி இசை கதைக்கு ஏற்றபடி உள்ளது .

ஒளிப்பதிவாளர்கள் கே.டொர்னாலா பாஸ்கர் மற்றும் பரணி குமார் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம் .

காதல் கதையுடன்  இதுவரை யாரும் சிந்திக்காத கதை ஒன்றை  வித்தியாசமான  திரைக்கதை அமைப்பில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர்  ஜி.வி.பெருமாள்,

ரேட்டிங் - 2 /5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: