'ரஜினி கேங்க்' - விமர்சனம்

ரஜினி சவுண்ட் சர்வீஸ் என்ற பெயரில் கடை நடத்தும் நாயகன் ரஜினி கிஷனும் பிரசிடென்ட் மகள் நாயகி துவிவிகாவும் காதலிப்பதால் இருவரும் ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள்
ஊர் மக்கள் துரத்த அப்போது அவர்களுக்கு முனீஷ்காந்த் தனது காரில் லிப்ட் கொடுக்கிறார்.
வழியில் திருடனான கல்கியும் அந்த காரில் ஏறிக்கொண்டு பயணிக்கிறார். இரவு நேரத்தில் பயணிக்கும் அவர்களை பல்வேறு தரப்பினர் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே, ரஜினி கிஷன் - துவிவிகாவுக்கு திருமணம் நடக்கிறது.
அந்த திருமணத்திற்குப் பிறகு காமெடி கதையாக ஆரம்பித்த படம் திடீரென்று பேய் கதையாக மாற பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படம்தான் ‘ரஜினி கேங்க்’
நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ரஜினி கிஷன் உடல் மொழியில் ஆட்டம், காதல், காமெடி என படம் முழுவதும் தேர்ந்த நடிகராக நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் துவிவிகா , முனீஷ்காந்த் , கூல் சுரேஷ் ,மொட்ட ராஜேந்திரன், கல்கி என நடித்தவர்கள் நடிப்பு சிறப்பு.
இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட்டின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைகேற்றபடி இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ் குமார், படத்தையும், பாடல் காட்சிகளையும் கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார்.
முழுக்க முழுக்க காமெடி கலந்த பேய்க் கதையுடன் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் எம்.எஸ்.ரமேஷ் பாரதி.
ரேட்டிங் - 3 / 5


